எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஜெய்ப்பூர் : ராஜினாமா ஏற்படுத்திய பரபரப்புக்கு இடையே எம்.எல்.ஏ. ஓய்வூதியத்துக்கு ஜெகதீப் தன்கர் விண்ணப்பம் செய்துள்ளார்.
இந்தியாவின் துணை ஜனாதிபதியாக இருந்தவர் ஜெகதீப் தன்கர். ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த அவர், அந்த மாநிலத்தில் உள்ள கிஷன்கர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக, கடந்த 1993-ம் ஆண்டு முதல் 1998-ம் ஆண்டு வரை பதவி வகித்தார். இதற்காக அவர் 2019-ம் ஆண்டு ஜூலை வரை ஓய்வூதியம் பெற்று வந்தார்
அதன் பிறகு அவர் மேற்கு வங்காள கவர்னராக நியமிக்கப்பட்டார். இதையடுதது எம்.எல்.ஏ. ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. 2022-ம் ஆண்டு இந்தியாவின் துணை ஜனாதிபதியாக ஜெகதீப் தன்கர் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்ற மாநிலங்களவை தலைவராக இருந்த அவர் மீது, உரிய நேரம் தரமறுப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றசாட்டு வைத்தன.
ஆனால் திடீரென்று கடந்த ஜூலை 21-ந் தேதி ஜெகதீப் தன்கர், தனது உடல்நிலையை காரணம் காட்டி துணை ஜனாதிபதி பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதற்கு பின்னணியில் பா.ஜனதாவின் அழுத்தம் இருந்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
இதற்கிடையே ஜெகதீப் தன்கர், தனக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கான ஓய்வூதியத்தை மீண்டும் கேட்டு, ராஜஸ்தான் அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். ராஜஸ்தானில் ஒரு முன்னாள் எம்.எல்.ஏ.வின் ஓய்வூதியம் ஒரு மாதத்திற்கு ரூ.35 ஆயிரத்தில் இருந்து தொடங்குகிறது, 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 20 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படுகிறது.
தற்போது 74 வயதாகும் ஜெகதீப் தன்கருக்கு மாதம் ரூ.42 ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


