முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பீகாரில் மின்னல் தாக்கி 15 பேர் பலி

வெள்ளிக்கிழமை, 2 ஆகஸ்ட் 2024      இந்தியா
Suicide 2023 04 29

Source: provided

பாட்னா: பீகார் மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி குறைந்தது 15 பேர் பலியானதாக மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாட்னா மற்றும் வைஷாலி மாவட்டங்களில் நேற்று இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், ஔரங்காபாத், ஜெஹனாபாத், சரண், ரோஹ்தஸ், நளந்தா மற்றும் ஜமூய் மாவட்டங்களில் மின்னல் பாய்ந்து மரணங்கள் பதிவாகியிருப்பதாகவும், ஔரங்காபாத்தில்தான் மின்னல் பாய்ந்து அதிகபட்சமாக 3 பெண்கள் உள்பட நான்கு பேர் பலியானதாகவும் கூறப்படுகிறது. ஜெஹனாபாத்தில் வயலில் வேலை செய்துகொண்டிருந்த மூன்று பேர் பலியாகியிருக்கிறார்கள். மின்னல் பாய்ந்த பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார்.

மழைக்காலத்தின்போது, மாநில மேலாண்மை துறை விடுக்கும் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றுமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மின்னல் பாய்ந்த மரணங்களில் 16 மற்றும் 14 வயது சிறார்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மின்னல் பாய்ந்த பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று முதல்வர் நிதீஷ் குமார் அறிவித்துள்ளார். மழைக்காலத்தின்போது, மாநில மேலாண்மை துறை விடுக்கும் அறிவுறுத்தல்களை மக்கள் பின்பற்றுமாறும் முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த மின்னல் பாய்ந்த மரணங்களில் 16 மற்றும் 14 வயது சிறார்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து