முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கமலா ஹாரிஸூடன் செப். 4-ல் விவாதம் நடத்த தயார்: டிரம்ப்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      உலகம்
Trump-Kamala 2024 07 24

Source: provided

வாஷிங்டன் : அதிகாரபூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நிலையில் கமலா ஹாரிஸூடன் செப்டம்பர் 4-ல் டி.வி. சேனலின் நேரடி விவாத நிகழ்ச்சியில் பங்கேற்க தயாராக இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5-ம் தேதி நடக்க உள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் தேர்தல் களத்திலிருந்து விலகிய நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் களமிறங்கி உள்ளார். 

இதற்கிடையே, ஜனநாயக கட்சி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வமாக  அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, கமலா ஹாரிசுடன் நேரடி விவாதம் நடத்த தயார் என டிரம்ப் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது  ஊடக பதிவில், வரும் செப்டம்பர் 4-ம் தேதி டி.வி. சேனலின் நேரடி விவாத நிகழ்ச்சியில் கமலா ஹாரிசுடன் பங்கேற்க நான் தயாராக இருக்கிறேன் என கூறி உள்ளார். இதுவரை கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படாமல் இருந்ததால் அவருடனான நேரடி விவாதத்தை டிரம்ப் புறக்கணித்து வந்தார். 

இந்நிலையில், அதிகாரபூர்வ வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதும் சவாலை ஏற்றுள்ளார். ஏற்கனவே பிரசாரத்தில் கமலா ஹாரிசுக்கு எதிராக இனவெறி தாக்குதலை டிரம்ப் நடத்தி வரும் நிலையில் அவர்களின் நேரடி விவாத நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து