முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி: முதல்வர் ஸ்டாலினுக்கு, கேரள முதல்வர் பினராய் விஜயன் நன்றி

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      இந்தியா
K-CM 2024 08 04

Source: provided

திருவனந்தபுரம் : நிவாரணப் பணிகளுக்காக ரூ.5 கோடி வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் கடந்த மாதம் 30-ம் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பூஞ்சிரித்தோடு, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை ஆகிய கிராமங்கள் சின்னாபின்னமாகின. நிலச்சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 357-ஆக உயர்ந்துள்ளது. 

இன்னும் 200 பேரை கண்டறிய முடியவில்லை என்பதால் மீட்பு பணிகள் தொடர்ந்து 6-வது நாளாக நேற்றும் நீடித்து வருகிறது. இதற்கிடையில், வயநாடு நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு கேரள அரசுக்கு, தமிழக அரசின் சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 கோடி வழங்கப்பட்டது. 5 கோடிக்கான காசோலையை நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கேரள மாநில முதல்வர்  பினராயி விஜயனிடம் நேரில் வழங்கினார்.

இந்த நிலையில், நிவாரணப் பணிகளுக்காக ரூ.5 கோடி வழங்கிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கேரள முதல்வர் பினராய் விஜயன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிப்பில், \"நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாட்டில் நிவாரணப் பணிகளுக்கு ரூ.5 கோடி தாராளமாக வழங்கிய தமிழக அரசு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மனமார்ந்த நன்றிகள். உங்களின் ஆதரவும், ஒற்றுமையும் மிகவும் பாராட்டப்பட்டதுடன், மறுவாழ்வு மற்றும் மறுகட்டமைப்பு முயற்சிகளுக்கு பெரிதும் உதவும்\" என்று தெரிவித்துள்ளார்.", 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து