முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வயநாடு நிலச்சரிவு: பேரிடர் மீட்பு குழுவினருக்கு நவீன கருவிகள் : நீலகிரி தி.மு.க.வினர் வழங்கினர்

ஞாயிற்றுக்கிழமை, 4 ஆகஸ்ட் 2024      தமிழகம்
TN 2024-05-19

Source: provided

ஊட்டி :  வயநாடு நிலச்சரிவில் மீட்பு பணிகளில் ஈடுபடும் ராணுவ வீரர்கள் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினருக்கு தேவையான ரூ.7 லட்சம் மதிப்பிலான 12 வகையான நவீன இயந்திர பொருட்கள் நீலகிரி தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 260-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர். காணாமல் போன பலரையும் இந்திய ராணுவத்தினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

இந்நிலையில், நீலகிரி மாவட்ட தி.மு.க. சார்பில் ரூ.7 லட்சம் மதிப்பிலான மீட்பு நவீன உபகரணப்பொருட்கள் வழங்க முடிவு செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நீலகிரி மாவட்ட தி.மு.க. செயலாளர் முபாரக் தலைமையில் நிர்வாகிகள் குன்னூர் ஆர்.டி.ஓ. சதீஷ்குமாரிடம் உபகரணங்களை வழங்கினர்.

முதல் கட்டமாக மீட்பு பணிக்கு தேவையான கேஸ் கட்டர், கான்கிரீட் உடைக்கும் நவீன இயந்திரங்கள், ஸ்டிரெக்ச்சர்கள், பணிகளில் ஈடுபடுவோருக்கான தேவையான பாதுகாப்பு உடைகள், காலணிகள், முக கவசம், சேனிடைசர், இரவு நேரங்களில் மீட்பு பணியில் ஈடுபட எல்.இ.டி. லைட்டுகள் உட்பட 12 வகையான பொருட்களை கேரளாவிற்கு அனுப்பப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் குன்னூர் தாசில்தார் கனிசுந்தரம், தி.மு.க. மாவட்ட அவைத்தலைவர் போஜன், நகர செயலாளர் ராமசாமி, நகராட்சி துணை தலைவர் வாசிம்ராஜா, ஒன்றிய செயலாளர் பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து