முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருப்-2 ஏ பதவிகளுக்கு வரும் 14-ம் தேதி 3-ம் கட்ட கலந்தாய்வு டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

வியாழக்கிழமை, 8 ஆகஸ்ட் 2024      தமிழகம்
TNPSC 2023-04-20

Source: provided

சென்னை: குருப்-2 ஏ பதவிகளில் உள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு  வரும் 14-ம் தேதி நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் எஸ்.கோபால சுந்தரராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 

குருப்-2 ஏ பணிகளில் அடங்கிய நேர்முகத்தேர்வு அல்லாத பதவிகளை நிரப்புவதற்கான முதன்மைத் தேர்வு கடந்த பிப்ரவரி 25-ம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் ஏப்ரல் 4-ம் தேதி வெளியிடப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, 2 கட்டங்களாக சான்றிதழ் சரிபார்ப்பும், கலந்தாய்வும் நடத்தப்பட்டு பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்நிலையில், எஞ்சியுள்ள காலியிடங்களை நிரப்புவதற்கான 3-வது கட்ட அசல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 14-ம் தேதி சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறும். 

இதற்கு அழைக்கப்பட்டுள்ள விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கான அழைப்பாணையை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட தேர்வர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அழைப்பாணை தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது. தேர்வர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண், ஒட்டுமொத்த தரவரிசை, இடஒதுக்கீடு மற்றும் காலியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்படுவர். 

எனவே, சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவருக்கும் கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு பணிநியமனம் வழங்கப்படும் என்பதற்கு உறுதி அளிக்க இயலாது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு வராதோருக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 3 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 5 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 5 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து