Idhayam Matrimony

விக்ரம் பிரபு அக்‌ஷய் குமார் கூட்டணியில் உருவாகும் சிறை

புதன்கிழமை, 15 அக்டோபர் 2025      சினிமா
Jail 2025-10-15

Source: provided

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ SS லலித் குமார் தயாரிப்பில், விக்ரம் பிரபு & L.K அக்‌ஷய் குமார் நடிப்பில், அறிமுக இயக்குநர்  சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில், உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாகியுள்ள படம் “சிறை”. வரும் டிசம்பர் 25 ஆம் தேதி  கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியாகிறது. டாணாக்காரன்  இயக்குநர் தமிழின் கதை மற்றும் திரைக்கதையில் சுரேஷ் ராஜகுமாரி இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஒரு காவலதிகாரிக்கும், விசாரணைக் கைதிக்குமான பயணம் தான் இப்படத்தின் மையம். விக்ரம் பிரபுவுக்கு  ஜோடியாக அனந்தா நடித்துள்ளார். SS லலித் குமார் மகன் LK அக்‌ஷய் குமார் இப்படத்தில் அறிமுகமாகிறார். இப்படத்தின்  படப்பிடிப்பு முழுமையாக முடிந்து  இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், விரைவில் டீசர்  இசை மற்றும் டிரெய்லர் வெளியீடு பற்றிய அறிவிப்புகள் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 9 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 10 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 10 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 12 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 12 months ago
View all comments

வாசகர் கருத்து