முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஷேக் ஹசீனா பெயரில் வெளியான அறிக்கைக்கு மகன் வாஜேத் மறுப்பு

திங்கட்கிழமை, 12 ஆகஸ்ட் 2024      உலகம்
Bangladesh 2024 08 12

Source: provided

டாக்கா : வங்கதேசத்தில் ஆட்சிக் கவிழ்ப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றஞ்சாட்டியிருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், அதுபோன்ற எந்த அறிக்கையும் எனது தாய் வெளியிடவில்லை என்று அவரது மகன் சஜீப் வாஜேத் தெரிவித்துள்ளார்.

அண்மையில், எனது தாய் எழுதியதாக வெளியான ராஜிநாமா கடிதத்தில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை, கற்பனையானவை. டாக்காவிலிருந்து வெளியேறுவதற்கு முன்போ அல்லது அதன் பிறகோ, எனது தாய் அதுபோன்ற எந்தவொரு அறிக்கையையும் வெளியிடவில்லை என்று வாஜேத் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, வங்கதேசத்தில் உள்ள மார்ட்டின் தீவுகளை கட்டுப்படுத்தும் அமெரிக்காவின் முயற்சிகளுக்கு தான் ஒத்துழைக்காததால் மறைமுகமாக ஆட்சியைக் கவிழ்த்தாக ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியிருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டத்தால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக பிரதமர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா கடந்த திங்கள்கிழமை இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

இந்நிலையில், பதவி விலகிய பின் முதல்முறையாக அவர் வெளியிட்டதாக ஒரு அறிக்கை வெளியாகியிருந்தது. அதில், ‘மார்ட்டின் தீவுகளையும் வங்காள விரிகுடாவையும் அமெரிக்காவுக்கு விட்டுக்கொடுத்திருந்தால் நான் பதவியில் நீடித்திருக்க முடியும். ஆனால் அதற்கு நான் ஒத்துழைக்கவில்லை. ஒருபோதும் நாட்டின் இறையாண்மையை அந்நிய சக்திகளுக்கு விட்டுத்தர இயலாது என தெரிவிக்கப்பட்டிருந்தது.  ஆனால், அந்த அறிக்கை உண்மையில்லை என்று, ஷேக் ஹசீனாவின் மகன் விளக்கம் அளித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து