முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்று அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதி: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்ஸ்-சின்னர் பலப்பரீட்சை

சனிக்கிழமை, 7 செப்டம்பர் 2024      விளையாட்டு
Brits-chinner-2024-09-07

நியூயார்க், அமெரிக்க ஓபன் இறுதிப்போட்டியில் இன்று ஆண்கள் ஒற்றையர் பிரிவில் பிரிட்ஸ் - சின்னர் பலப்பரீட்சை நடத்துகின்றனர்.

தொடக்கம் முதலே... 

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. இதில் பல முன்னணி வீரர் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ், பிரான்சிஸ் தியாபே ஆகியோர் மோதினர். தொடக்கம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் செட்டை தியாபே கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக 2வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றினார்.

இறுதிப்போட்டி... 

இதேபோல் 3வது செட்டை தியாபேவும், 4வது செட்டை பிரிட்சும் கைப்பற்றினர். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை பிரிட்ஸ் கைப்பற்றி அசத்தினார். இறுதியில் பிரிட்ஸ் 4-6, 7-5, 4-6, 6-4, 6-1 என்ற செட் கணக்கில் போராடி வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். இது இவரது கிராண்ட்ஸ்லாம் போட்டியின் முதல் இறுதிப்போட்டி ஆகும். இன்று நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் அமெரிக்காவின் பிரிட்ஸ், நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னரை எதிர்கொள்கிறார்.

சின்னர் வெற்றி...

முன்னதாக நடந்த மற்றொரு ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் நம்பர் 1 வீரரான இத்தாலியின் ஜானிக் சின்னர், இங்கிலாந்தின் ஜாக் டிராப்பர் உடன் மோதினார். இதில் சின்னர் 7-5, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். நாளை இறுதிப் போட்டி நடைபெறும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து