எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புது டெல்லி, செபி தலைவர் மாதவி புச், மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து கன்சல்டன்சி என்ற பெயரில் 2.95 கோடி ரூபாய் வாங்கினார் என்று காங்கிரஸ் கட்சி மற்றொரு புதிய குற்றச்சாட்டை தெரிவித்துள்ளது.
மும்பை பங்குச்சந்தையின் தலைவராக இருப்பவர் மாதவி புச். இவர் மீது காங்கிரஸ் கட்சி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இந்த நிலையில் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் பவன் கெரா நேற்று கூறியதாவது:
செபி தலைவர் மாதவி, 2016 முதல் 2024 வரையிலான காலத்தில் மஹிந்திரா நிறுவனத்திடம் இருந்து 2.95 கோடி ரூபாய் பெற்றுள்ளார். அவரது ஆலோசகர் நிறுவனமான அகோரா அட்வைசரி நிறுவனம் மூலம் இந்த தொகை பெறப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் முடங்கி விட்டது என்று மாதவி கூறியுள்ளார். அது தவறு. அந்த நிறுவனம் செயல்படுகிறது. நிதியும் பெற்றுள்ளது. அதில் மாதவிக்கு 99 சதவீதம் பங்குகள் உள்ளன. மஹிந்திரா தவிர, டாக்டர் ரெட்டிஸ், பிடிலைட், ஐ.சி.ஐ.சி.ஐ., செம்ப்கார்ப், விசு லீசிங் உள்ளிட்ட நிறுவனங்கள், மாதவியின் அகோரா நிறுவன சேவையை பெற்றுள்ளன என்று கூறினார்.
கடந்த மாதம், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் இரட்டைப்பதவி வகித்ததன் மூலம், 16.80 கோடி ரூபாய் மாதவி லாபம் அடைந்ததாக காங்கிரஸ் குற்றம் சாட்டியது. அதை வங்கியே மறுத்த நிலையில், நேற்று மற்றொரு புதிய குற்றச்சாட்டை காங்கிரஸ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |