முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஹில்சா மீன்களை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்ய வங்கதேசம் தடை

செவ்வாய்க்கிழமை, 10 செப்டம்பர் 2024      இந்தியா
Hilsa-fish 2024-09-10

Source: provided

புதுடில்லி : இந்தியாவில் துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகைகளின் போது அதிகம் விற்பனையாகும் ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்ய வங்கதேச இடைக்கால அரசு தடை விதித்துள்ளது.

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியின்போது அந்நாட்டு அரசு, இந்தியாவிற்கு ஆண்டுதோறும் பண்டிகை காலத்தை முன்னிட்டு ஆகஸ்ட் முதல் அக்டோபர் காலகட்டத்தில், ஹில்சா மீன்களை ஏற்றுமதி செய்து வந்தது. துர்கா பூஜை கொண்டாட்டங்களின் போது இந்த ஹில்சா மீன்கள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. 2019ல் 500 மெட்ரிக் டன் மீன்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில், கடந்த 2023ல் 3,950 மெட்ரிக் டன்னாக அதிகரித்தது.

இந்தியாவில் விற்பனையாகும் 70 சதவீத ஹில்சா மீன்கள் வங்கதேசத்தில் இருந்து தான் கிடைக்கிறது. இந்த மீன்கள் வங்கதேசத்தில் இருந்து மியான்மர் வழியாக இந்தியாவிற்கு கொண்டுவரப்படும். இந்த நிலையில் ஹில்சா மீன்களை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்ய வங்கதேசத்தின் இடைக்கால அரசு தற்போது தடை விதித்துள்ளது. ஏற்றுமதிக்கு தடை விதித்திருப்பதால் தட்டுப்பாடு நிலவ வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து