முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரியானா சட்டசபை தேர்தல்: வினேஷ் போகத் வேட்புமனுத் தாக்கல்

புதன்கிழமை, 11 செப்டம்பர் 2024      இந்தியா
Vinesh-Bhogat-2024-09-07

சண்டிகர், அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வினேஷ் போகத் ஜூலானா தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்தார். இந்த நிகழ்வின்போது, காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை உறுப்பினருமான தீபேந்தர் ஹூடா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மல்யுத்தத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த வினேஷ் போகத், கடந்த வாரம் காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி உள்ளிட்டோரை சந்தித்த பிறகு அந்த கட்சியில் இணைந்தார். இதனைத் தொடர்ந்து, அக்டோபர் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள அரியானா சட்டப்பேரவைத் தேர்தலில் ஜூலானா தொகுதியில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது.

ஜூலானா சட்டப்பேரவைத் தொதியில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவை புதன்கிழமை தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களை வினேஷ் போகத் சந்தித்தார். அப்போது, “அரசியலுக்கு வருவது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். அனைத்து பிரிவினரின் நலனுக்காகவும் நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். ஜூலானா மக்கள் எனக்கு அளித்து வரும் அன்புக்கு நான் நன்றியுள்ளவளாக இருப்பேன்” எனத் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து