முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் மழையை நிறுத்த, பொழியவைக்க திட்டம்

வெள்ளிக்கிழமை, 13 செப்டம்பர் 2024      இந்தியா
rain 2023-05-25

புதுடெல்லி, இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில், வானிலையைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தைக் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். 

குறிப்பிட்ட பகுதியில், மழையை பொழியவைக்கவும், அதிக மழையை நிறுத்தவும், இடி மற்றும் மின்னலையும் செயற்கையாக உருவாக்கும் தொழில்நுட்பத்தை இந்திய வானிலை ஆராய்ச்சியாளர்கள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், சுதந்திர தினத்தன்று புது தில்லியில் தேசியக் கொடியேற்றும் நிகழ்வு நடக்கும்போது, மழை பொழியாமல் தடுக்கவும் முடிவும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது குறித்து புவி அறிவியல் அமைச்சக செயலாளர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருக்கிறது. அதில், முதற்கட்டமாக, செயற்கை மழையை ஏற்படுத்துவது, மழை பொழிவை கட்டுப்படுத்துவது போன்றவை சோதனை முறையில் செய்து பார்க்கப்படும். மேகக் கூட்டங்களுக்கான கிளவுட் சேம்பர்ஸ் அடுத்த 18 மாதங்களில் தயாரிக்கப்படும். ஆனால், விரைவில், வானிலையை செயற்கை முறையில் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளில் கொண்டு வருவோம் என்று தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமானதாக கொடுக்கும் தொழில்நுட்பமும் கொண்டு வரப்படும். இதன் மூலம், இந்தியா வானிலை-அறிவுசார் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருப்பதோடு, திடீர் மேக வெடிப்புச் சம்பவங்கள் நிகழாமலும் பார்த்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சாட் ஜிபிடி போன்றே மௌசம் ஜிபிடி உருவாக்கப்பட்டு, பயனர்கள் எங்கிருந்தாலும் வானிலை குறித்த அறிவிப்புகளை உடனடியாக அறிந்துகொள்ள வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அமெரிக்கா, கனடா, சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மழைப் பொழியை உருவாக்குதல், கட்டுப்படுத்துதால் போன்றவையும், விமானங்கள் மூலம் மேகங்களை உருவாக்கும் முறையும் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 4 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 6 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 6 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து