எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுடெல்லி : மகளிர் டி20 உலகக்கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இரு பிரிவுகளாக...
10 அணிகள் இடையிலான 9-வது ஐ.சி.சி. மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் துபாய் மற்றும் ஷார்ஜாவில் அக்டோபர் 3ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தொடரில் கலந்து கொள்ளும் 10 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதில் குரூப் ஏ-யில் ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகளும், குரூப் பி-யில் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம், ஸ்காட்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
ஹர்மன்ப்ரீத் கவுர்...
இந்த தொடரில் இந்திய அணி ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் களமிறங்க உள்ளது. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் அக்டோபர் 4ம் தேதி நியூசிலாந்தை துபாயில் சந்திக்கிறது. மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் அக்டோபர் 6-ல் துபாயில் நடக்கிறது. இதனையடுத்து இந்தியா தனது கடைசி 2 லீக் ஆட்டங்களில் முறையே 9-ம் தேதி இலங்கையுடனும், 13-ம் தேதி ஆஸ்திரேலியாவுடனும் மோத உள்ளது.
66.64 கோடி ரூபாய்...
இந்த நிலையில், மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐ.சி.சி. அறிவித்துள்ளது .மகளிர் டி20 உலகக் கோப்பைக்கான ஒட்டுமொத்த பரிசுத்தொகையாக இந்திய மதிப்பில் சுமார் 66.64 கோடி ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது. கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.19.60 கோடியும் ரன்னர் அப் அணிக்கு ரூ.9.80 கோடியும் அரையிறுதிக்கு தகுதி பெறும் அணிக்கு ரூ.5.65 கோடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |