Idhayam Matrimony

ராகுலின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் : முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

புதன்கிழமை, 18 செப்டம்பர் 2024      தமிழகம்
CM-1 2024-03-17

Source: provided

சென்னை : மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ராகுல் காந்திக்கு பா.ஜ.க. பிரமுகர் ஒருவரும் மகராஷ்டிராவின் ஆளும் ஷிண்டே சேனா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவரும் மிரட்டல் விடுத்ததை சுட்டிக் காட்டி தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

அண்மையில் அமெரிக்கா சென்ற ராகுல் காந்தி கூறிய கருத்துகளுக்கு கண்டனம் தெரிவித்த பா.ஜ.க. பிரமுகர் தர்வீந்தர் சிங், ராகுல் காந்தி, இதுபோன்ற செயல்களில் இருந்து விலகி இருங்கள். இல்லையெனில் வரும் காலத்தில் உங்கள் பாட்டிக்கு ஏற்பட்ட கதியை நீங்களும் சந்திக்க நேரிடும் எனக் கூறியிருந்தார்.

அதே போல் மகராஷ்டிராவில் ஆளும் ஷிண்டே சேனா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர், ராகுல் காந்தியின் நாக்கை துண்டித்து வருபவருக்கு சன்மானம் என்று அறிவித்ததோடு பல்வேறு அருவருக்கத்தக்க விமர்சனங்களையும் அச்சுறுத்தல்களையும் முன்வைத்திருந்தார்.

இவற்றைச் சுட்டிக் காட்டியுள்ள  முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில், 

பா.ஜ.க. தலைவர் ஒருவர்  ராகுல் காந்தியின் பாட்டிக்கு நேர்ந்த கதிதான் அவருக்கும் நேரும் எனவும், ஷிண்டே சேனாவின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ராகுல் காந்தியின்  நாக்கை அறுப்பவருக்குப் பரிசு எனவும், இன்ன பிற வகைகளிலும் மிரட்டல் விடுத்திருப்பதாக ஊடகங்களில் வெளிவந்துள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

எனது சகோதரர் ராகுல் காந்தியை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவதும், நாளுக்கு நாள் அவருக்குக் கூடி வரும் பொதுமக்களின் ஆதரவும் பலரையும் மிரளச் செய்துள்ளதன் தொடர்ச்சியாகவே இத்தகைய அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றன.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியின்  பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து, அச்சுறுத்தலுக்கும் வன்முறைக்கும் நமது மக்களாட்சியில் இடமில்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து