முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

29 தமிழக விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு நிதியுதவி : அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      தமிழகம்
Udayanidhi 2024-03-20

Source: provided

சென்னை : தமிழகத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சம் நிதியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து தமிழகத்தைச் சேர்ந்த 29 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.54.20 லட்சத்திற்கான காசோலைகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (20.09.2024) தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து, தென் கொரியாவில் நடைபெற உள்ள 2024 உலக டேக்வாண்டோ ஜுனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள வீராங்கனை ஆர்.ஜனனிக்கு செலவீனத் தொகையாக ரூ.3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.

மேலும் கம்போடியாவில் 06.10.2024 முதல் 13.10.2024 வரை நடைபெற உள்ள ஆசிய கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள 5 வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.2.50 லட்சம் மற்றும் உஸ்பெக்கிஸ்தானில் 24.09.2024 முதல் 29.09.2024 வரை நடைபெற உள்ள கிக் பாக்ஸிங் உலக கோப்பைப் போட்டியில் பங்கேற்க உள்ள 11 வீரர், வீராங்கனைகளுக்கு செலவீனத் தொகையாக தலா ரூ.2 லட்சத்திற்கான காசோலையினை வழங்கினார்.

ஸ்பெயினில் நடைபெற உள்ள உலக ஸ்ட்ராங்மேன் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள டி.கண்ணனுக்கு செலவீனத் தொகையாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையினையும், உஸ்பெக்கிஸ்தானில் நடைபெற உள்ள 8-வது ஆசிய பென்காக்சிலாட் 2024 சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள 7 வீரர்களுக்கு தலா ரூ.1.50 லட்சம் மற்றும் சீனாவில் 28.09.2024 மற்றும் 29.09.2024 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள WDSF (World DanceSport Federation) உலக பிரேக்கிங் நடன விளையாட்டு யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க உள்ள பிரேம் காந்தி மற்றும் ஆராதனா ஆகியோருக்கு செலவீனத் தொகையாக தலா ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை மற்றும் அ.கருணாசாகர், ஆர்.பிரணவ்சாய் இருவக்கும் ஸ்கேட்டிங் உபகரணங்கள் வாங்குவதற்காக தலா ரூ.60 ஆயிரத்திற்கான காசோலையினை அமைச்சர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யமிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாதரெட்டி மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து