முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஜெய்ஸ்வால் புதிய மைல்கல்

வெள்ளிக்கிழமை, 20 செப்டம்பர் 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

சென்னை : வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியின்போது ஜெய்ஸ்வால் சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ளார்.

2-வது இன்னிங்ஸ்....

இந்தியா - வங்காளதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்சில் இந்தியா 376 ரன்களும், வங்காளதேசம் 149 ரன்களும் அடித்தன. இதனையடுத்து 237 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா 3 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது.

அதிக ரன்கள்... 

இந்த போட்டியில் ஜெய்ஸ்வால் இரு இன்னிங்ஸ்களில் முறையே 56 மற்றும் 10 ரன்கள் அடித்தார். இதன் மூலம் அறிமுகம் ஆன முதல் 10 டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர் என்ற சுனில் கவாஸ்கரின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ள அவர் புதிய சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சுனில் கவாஸ்கர் 978 ரன்கள் குவித்ததே அதிகபட்சமாக இருந்தது. தற்போது அதனை தகர்த்துள்ள ஜெய்ஸ்வால் 1094 ரன்களுடன் புதிய சாதனை படைத்துள்ளார்.

முதல் 10 போட்டிகளில் அதிக ரன்கள்:

1. டான் பிராட்மேன் - 1446 ரன்கள்.

2.எவர்டன் வீக்ஸ் - 1125 ரன்கள்.

3.ஜார்ஜ் ஹெட்லி - 1102 ரன்கள்.

4.ஜெய்ஸ்வால் - 1094 ரன்கள்.

5.மார்க் டெய்லர் - 1088 ரன்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து