முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக். 3-ல் துவக்கம்

ஞாயிற்றுக்கிழமை, 29 செப்டம்பர் 2024      ஆன்மிகம்
Samayapuram 2024-03-29

Source: provided

திருச்சி : திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்டோபர் 3-ம் தேதி தொடங்குகிறது. 

அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலில் எழுந்தருளி உள்ள மாரியம்மன், தனது சுயம்பு திருமேனியில் நவகிரகங்கள் மற்றும் 27 நட்சத்திரங்களின் ஆதிக்கங்களையும், எந்திரங்களாக திருமேனி பிரதிஷ்டையில் உள்ளடக்கி சக்தி தலங்களில் ஆதிபீடமாக, சுயம்பு வடிவமாக அஷ்டபுஜங்களுடன் அருள்பாலிக்கிறார்.

ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத அமாவாசைக்கு மறுதினம் பிரதமை முதல் நவமி வரை தேவி பாகவதம், அக்னி புராணம், தேவி மகாத்மியம் ஆகிய புராணக் கூற்றுகளின்படி அதர்மமான மகிஷா சூரனை அழிக்க ஊசி முனையில் துர்க்கை, மகாலட்சுமி, சரஸ்வதி என முறையே முதல், நடு, கடை என மும்மூன்று நாட்களாக 9 நாட்கள் கடும் தவம் புரிந்து 10-வது நாள் விஜயதசமி அன்று வெற்றி பெற்ற திருநாளை நவராத்திரி பெருவிழாவாக கொண்டாடுவது இத்தலத்தின் மரபு.

அதன்படி நவராத்திரி விழா வருகிற அக்டோபர் மாதம் 3-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் 3-ம் தேதி அம்மன் குமாரிகா அலங்காரத்திலும், 4-ம் தேதி திரிமூர்த்தி அலங்காரத்திலும், 5-ம் தேதி கல்யாணி அலங்காரத்திலும் (துர்க்கை அம்சம்) எழுந்தருளுகிறார். 

6-ம் தேதி ரோகினி அலங்காரத்திலும், 7-ம் தேதி காளகா அலங்காரத்திலும், 8-ம் தேதி சண்டிகா அலங்காரத்திலும் (மகாலட்சுமி அம்சம்) அம்மன் எழுந்தருளுகிறார். 9-ம் தேதி சாம்பவி அலங்காரத்திலும், 10-ம் தேதி துர்கா அலங்காரத்திலும், 11-ம் தேதி சுபத்ரா அலங்காரத்திலும் (சரஸ்வதி அம்சம்) அம்மன் அருள்பாலிக்கிறார். 

12-ம் தேதி விஜயதசமி அன்று அம்மன் வேடுபரி அலங்காரத்தில் எழுந்தருளுகிறார். அன்று இரவு அம்மன் வெள்ளிக்குதிரை வாகனத்தில் புறப்பாடாகி வன்னி மரம் சென்றடைகிறார். இதையடுத்து அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாள் இரவும் பரதநாட்டியம் மற்றும் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது. இதே போல் இனாம் சமயபுரத்தில் உள்ள ஆதி மாரியம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா 3-ம் தேதி தொடங்கி 11-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

12-ம் தேதி அம்பு போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று இரவு ஆதிமாரியம்மன் குதிரை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் இளங்கோவன், கோவில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து