முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நைஜீரியாவில் படகு விபத்து: 60 பேர் பலி - 160 பேர் மீட்பு

வெள்ளிக்கிழமை, 4 அக்டோபர் 2024      உலகம்
Nigeria 2024-10-04

Source: provided

அபுஜா : மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 100-ஐ தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது.

வடக்கு நைஜீரியாவின் நைஜர் மாநிலம், முண்டி என்ற இடத்தில் வருடாந்திர இஸ்லாமிய திருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற சுமார் 300 பேர் நேற்று முன்தினம் இரவு நைஜர் ஆற்றில் ஒரு படகில் கபாஜிபோ என்ற இடம் நோக்கி திரும்பிக் கொண்டிருந்தனர். படகில் ஆண்களை விட பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிக எண்ணிக்கையில் இருந்தனர்.

இந்நிலையில் நைஜர் மாநிலத்தின் மோக்வா பகுதியில் இவர்களின் படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது. தகவல் அறிந்து மீட்புக் குழுவினரும் தன்னார்வலர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். இதில் சுமார் 60 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். சுமார் 160 பேர் கரைக்கு நீந்திச் சென்றும் மீட்புக் குழுவால் மீட்கப்பட்டும் உயிர் தப்பினர். இந்நிலையில் எஞ்சிய 80 பயணிகளை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக் குழுவினர் தொடர்ந்துஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்தில் உயிரிழப்பு 100-ஐ தாண்டக் கூடும் என அஞ்சப்படுகிறது.

நைஜீரியாவின் நீர்வழிப் போக்குவரத்தில் அடிக்கடி படகு விபத்துகள் நிகழ்கின்றன. படகுகளை முறையாக பராமரிக்காதது, அளவுக்கு மேல் பயணிகளை ஏற்றுவதுஆகியவை பெரும்பாலும் படகு விபத்துகளுக்கு காரணங்களாக உள்ளன. இந்நிலையில் தற்போது விபத்துக்குள்ளான படகில் சுமார் 300 பேர் பயணம் செய்த நிலையில், 100 பேர் மட்டுமே அப்படகில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து