முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்போம்: துணை முதல்வர் உதயநிதி அறிவுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 15 அக்டோபர் 2024      தமிழகம்
Udayanidhi-1 2023-10-15

சென்னை, பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்போம் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார் 

 இது குறித்து துணை முதல்வர்  உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை உட்பட தமிழகத்தின்  பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. முதல்வர்,  தலைமையிலான திராவிட மாடல் அரசு, மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைச் சீரிய முறையில் மேற்கொண்டுள்ள நிலையில், அவற்றைத் தொடர்ந்து கண்காணித்தும் வருகிறது.

முதல்வர், நான், அமைச்சர் பெருமக்கள், சட்டமன்ற,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகளும் களத்தில் இறங்கி மழைப் பாதிப்புகளில் இருந்து மக்களைக் காக்கின்ற பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்.

மழைநீர் வடிவதை உறுதிசெய்வது, தற்காலிகத் தங்குமிடங்களுக்கான ஏற்பாடுகளைச் செய்வது, உணவு,  பால், பிரெட் உள்ளிட்ட நிவாரணங்களை வழங்குவது என இப்பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

இந்தச் சூழலில், தி.மு.க.வின்  இளைஞரணி சார்பிலும் நம் நிர்வாகிகள் பல்வேறு நிவாரணப்பணிகளில் ஈடுபட்டு வருவதை நான் அறிவேன். மழை இடைவிடாது பெய்வதாலும், வானிலை எச்சரிக்கை தொடர்வதாலும், தொடர்ந்து களத்தில் நின்று மக்களுக்கு அனைத்து வகையிலும் உதவிட வேண்டிய பொறுப்பு இளைஞர் அணியின் ஒவ்வொரு நிர்வாகிக்கும், உறுப்பினர்களுக்கும் உள்ளது.

ஆகவே, மழைக்கால நிவாரணப் பணிகளை மாவட்ட, மாநகர, மத்திய, நகர, பகுதி, பேரூர், வார்டு, ஊர்க்கிளை அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள்  இன்னும் வேகத்துடன் முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். 

பொதுமக்களிடம் இருந்து வருகிற கோரிக்கைகளை கட்சியின்  மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்டோருடன் இணைந்து நிறைவேற்றித் தரும் பணியை இளைஞர் அணியினர் செய்து கொடுக்கலாம். அதே போல, அரசுக்கும், பொதுமக்களுக்கும் பாலமாகச் செயல்படுவது அவசியம்.

மேலும், தமிழகமெங்கும் தன்னார்வலர்கள் மழைக்கால நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு நம் இளைஞரணியினர் துணைநின்று வேண்டிய உதவிகளைச் செய்து கொடுக்க வேண்டுமென்றும் கேட்டுக் கொள்கிறேன். 

இளைஞரணி நிர்வாகிகளின் மழைக்கால நிவாரணப்  பணிகளை மாநிலத் துணைச் செயலாளர்கள் ஒருங்கிணைப்பார்கள். ஓரணியில் நிற்போம். பருவமழையின் தாக்கத்தில் இருந்து மக்களைக் காப்போம். இவ்வாறு அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து