முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணத்துக்கு டிச. 16-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் : இந்து சமய அறநிலையத்துறை தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 3 நவம்பர் 2024      தமிழகம்
Rameswaram 2024-11-03

Source: provided

சென்னை : ராமேசுவரம் - காசி  ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்க டிச.16-ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

2022-23-ம் ஆண்டுக்கான இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயிலில் இருந்து, காசியில் உள்ள விஸ்வநாத சுவாமி கோயிலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த பக்தர்கள், ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்படுவர் என்றும், இதற்கான செலவினத் தொகையை அரசே ஏற்கும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, கடந்த 2022-23-ம் ஆண்டில் 200 பேர்களும், 2023-24-ம் ஆண்டில் 300 பேர்களும் ராமேசுவரத்திலிருந்து காசிக்கு ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட்டனர். இந்நிலையில். 2024-25ம் ஆண்டிற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

இது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 

ராமேசுவரம். அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலிலிருந்து காசி, அருள்மிகு விஸ்வநாதசுவாமி திருக்கோயிலுக்கு ஆன்மிகப் பயணம் செல்ல, தமிழகத்தை சேர்ந்தவர்கள் இந்து சமய அறநிலையத் துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து தலா 21 நபர்கள் வீதம் 420 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சேர்ந்தவராகவும், இறை நம்பிக்கை உடையவராகவும், 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்களை மண்டல இணை ஆணையர் அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்து சமய அறநிலையத்துறையின் www.hrce.tn.gov.in என்ற வலைத்தளத்திலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள நிபந்தனைகளின்படி பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய இணைப்புகளுடன் டிசம்பர் 16-ம் தேதிக்குள் மண்டல இணை ஆணையர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராமேசுவரத்தில் துவங்கும் இந்த ஆன்மிகப் பயணம் காசி தரிசனம் முடிந்து மீண்டும் ராமேசுவரம் வந்து ராமநாதசுவாமியை தரிசனம் செய்த பின்னரே நிறைவுபெறும், என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து