முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெள்ளை மாளிகை செல்கிறார் டிரம்ப் : ஜோபைடனுடன் 13-ம் தேதி சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      உலகம்
Joe-Biden 2023-08-26

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்க அதிபராக தேர்வாகி உள்ள டிரம்ப் வருகிற 13-ம் தேதி வெள்ளை மாளிகை சென்று அங்கு தற்போதைய அதிபர் ஜோபைடனை சந்தித்து பேசவுள்ளதாக  வெள்ளை மாளிகை  தெரிவித்துள்ளது. 

அமெரிக்காவின் 47-வது அதிபராக  குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து அவருக்கு உலக தலைவர்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். 

அந்த வகையில் தற்போதைய  அதிபர் ஜோ பைடனும், டிரம்ப்பை எதிர்த்துப் போட்டியிட்ட தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிசும் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்தனர். டிரம்ப் வெற்றியை தொடர்ந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த ஜோ பைடன், அதிகார மாற்றத்தை சுமுகமாக நிறைவேற்றுவது குறித்து விவாதிக்க வெள்ளை மாளிகைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் டிரம்ப் வருகிற 13-ம் தேதி வெள்ளை மாளிகை செல்கிறார். அங்கு அதிபரின் ஓவல் அலுவலகத்தில் இருவரும் சந்தித்து பேசுகின்றனர். இந்த தகவலை வெள்ளை மாளிகை  வெளியிட்டுள்ளது. அமெரிக்க அதிபராக டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு ஜோ பைடனை சந்திப்பது இது முதல் முறையாகும். 

தேர்தலுக்குப் பிறகு, பதவியில் இருந்து விலகும் அதிபர் மற்றும் பதவிக்கு வரவிருக்கும் அதிபருக்கு இடையேயான இத்தகைய சந்திப்பு அமெரிக்காவில் வழக்கமாக உள்ளது. இது அமெரிக்காவில் ஜனநாயகத்தின் கீழ் அமைதியான அதிகார பரிமாற்றத்தின் தொடக்கத்தைக் குறிக்கும். 

எனினும், கடந்த 2020-ல் நடந்த அதிபர் தேர்தலில் டிரம்ப் தோல்வி அடைந்ததும், அவர் ஜோ பைடனுடன் வெள்ளை மாளிகையில் சந்திப்பை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் 47வது அதிபராக வரும் ஜனவரி மாதம் 20-ம் தேதி  டிரம்ப் பதவியேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து