முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் பிரேமலதா தலைமையில் தே.மு.தி.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : 10 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2024      தமிழகம்
Pramalatha 2023-07-24

Source: provided

சென்னை : சென்னையில் நேற்று தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில்,  மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

 தமிழகம் முழுவதும் இருந்து தே.மு.தி.க.வினர்  பொதுமக்களுடன் கலந்து கொண்டு, அனைவரும் ஒன்று சேர்ந்து விஜயகாந்த் நினைவு நாளை வருடம் தோறும் அஞ்சலி செலுத்துவோம். பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும்.  பாலியல் வன்கொடுமையையும் தடுக்கும் விதத்தில் மத்திய, மாநில அரசுகள் கடுமையான சட்டத்தால் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

போர்க்கால அடிப்படையில் திட்டங்களை தீட்டி, சாலைகள் மற்றும் போக்குவரத்தை திறம்பட செயல்படுத்த வேண்டும். மாநகராட்சி சொத்து வரியை மீண்டும் அதிகமாக உயர்த்தி, மக்களுக்கு கடுமையான சுமையை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இதை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட ஏற்பாடுகள் செய்வதை கைவிட்டு விட்டு, தமிழக விவசாயிகளும், கர்நாடகா விவசாயிகளும் பயன்பெறுகின்ற வகையில் ராசிமணல் என்ற இடத்தில் அணை கட்டினால் இரண்டு மாநிலமும் நீர் வசதி பெறுகின்ற வகையில் தீர்வு காண வேண்டும்.

 டாக்டர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு சம்பளம் உயர்வும், ஆசியர்களுக்கு பழைய ஊதியம் மற்றும் அரசு ஊழியர்களுடைய பல்வேறு கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். தமிழகத்தில் கனிமவள கொள்ளை நாளுக்கு நாள் அதிகரிப்பதையும் தென்காசி மாவட்டத்திலிருந்து கன்னியாகுமரி வழியாக கனரக வாகனங்கள் மூலம் கேரளா மாநிலத்திற்கு கனிம வளம் கடத்திச் செல்லப்படுவதை தடுக்க தடுக்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் மின்சாரக்கட்டணம் உயர்வை திரும்ப பெற வலியுறுத்தியும்,  தமிழக மக்களுக்காக கேப்டன் கொண்ட லட்சியத்தை நிறைவேற்றிட வேண்டும் என உறுதியேற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 1 week ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 1 week ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 1 week ago
View all comments

வாசகர் கருத்து