எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமியால் அமைக்கப்பட்டுள்ள 10 பேர் அடங்கிய கள ஆய்வு குழுவின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறுகிறது.
கட்சிப் பணிகளை விரைவு படுத்துவதற்காக அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விசுவநாதன், .தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, டி.ஜெயக்குமார் சி.வி.சண்முகம் எம்.பி., செம்மலை, பா.வளர்மதி, வரகூர் அருணாசலம் ஆகிய 10 பேர் கொண்ட கள ஆய்வு குழு ஒன்றை அமைத்து கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 தினங்களுக்கு முன் அறிவித்தார்.
மேற்கண்ட குழுவினர், அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை வருகிற டிசம்பர் 7-ம் தேதிக்குள் அறிக்கையாக சமர்ப்பிக்குமாறு எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், இன்று திங்கட்கிழமை காலை 10 மணிக்கு கள ஆய்வுக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஆலோசனைக்கு பிறகு மாவட்ட வாரியாக, கிளை, வார்டு, வட்டக்கழகங்கள் மற்றும் சார்பு அமைப்புகளின் செயல்பாடுகளை இந்த குழுநேரடியாக கள ஆய்வு செய்ய உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


