முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகளவில் இந்திய இளைஞர்களின் தேவை மேலும் அதிகரிக்க போகிறது : பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

திங்கட்கிழமை, 11 நவம்பர் 2024      இந்தியா
Modi-2024-07-27

Source: provided

புதுடெல்லி : இந்திய இளைஞர்களுக்கான உலகளாவிய தேவை மேலும் அதிகரிக்கப் போகிறது; திறன்மிகு இந்திய இளைஞர்கள் தங்கள் நாட்டில் வேலை செய்ய வேண்டும் என்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் எதிர்பார்க்கிறார்கள்; இந்திய இளைஞர்களின் திறமையால் உலகமே கவரப்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் உள்ள ஸ்ரீ சுவாமி நாராயண் கோயிலின் 200ம் ஆண்டு விழாவில் காணொலி மூலம் கலந்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: சுவாமி நாராயணன் கோயில் அமைக்கப்பட்டு 200 ஆண்டுகள் ஆகின்றன. இந்திய கலாச்சாரத்தின் தொடர் ஓட்டத்திற்கு இது ஒரு சான்று. சுவாமி நாராயண் கோயிலின் ஆன்மிக உணர்வை நாம் உயிர்ப்புடன் வைத்திருக்கிறோம். இந்த மகத்தான நிகழ்வை ஒட்டி ரூ.200 வெள்ளி நாணயம் மற்றும் நினைவு முத்திரையை இந்திய அரசு வெளியிட்டுள்ளது என்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

வளர்ந்த இந்தியாவுக்கான அடிப்படை, நமது நாடு தற்சார்பு கொண்டதாக மாற வேண்டும் என்பதே. இதை நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம். இந்தியா தற்சார்பு அடைவதை நாமே உறுதி செய்ய வேண்டும்; நாட்டின் 140 கோடி மக்களே இதை செய்ய வேண்டும். உள்ளூர் பொருட்களுக்கு முன்னுரிமை என்பது இந்தியாவின் பிரகாசமான எதிர்காலத்திற்கான முக்கியமான முயற்சி. துரதிர்ஷ்டவசமாக இன்று சிலர் தங்களின் குறுகிய புரிதலின் காரணமாக இதன் முக்கியத்துவத்தை மறந்து விடுகின்றனர்.

சமூகத்தை சாதி, மதம், மொழி, உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஆண், பெண், கிராமம் எனப் பிரிக்கும் சதி நடக்கிறது. தேச விரோதிகளின் இந்த முயற்சியின் தீவிரத்தை நாம் புரிந்துகொள்வதும், நெருக்கடியைப் புரிந்துகொள்வதும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதும் அவசியம். வலிமையான, திறமையான, படித்த இளைஞர்களை நாம் உருவாக்க வேண்டும். திறமையான இளைஞர்கள் நமது மிகப்பெரிய பலமாக மாற வேண்டும். இந்திய இளைஞர்களுக்கான உலகளாவிய தேவை மேலும் அதிகரிக்கப் போகிறது. உலக தலைவர்கள் பலரை நான் சந்திக்கும்போது அவர்கள் கூறுவது, திறமையான இந்திய இளைஞர்கள் தங்கள் நாட்டில் வேலை செய்ய முன்வர வேண்டும் என்பதைத்தான். பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதை எதிர்பார்க்கிறார்கள். இந்திய இளைஞர்களின் திறமையால் உலகமே கவரப்படுகிறது. இவ்வாறு நரேந்திர மோடி உரையாற்றினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 5 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 6 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 8 months 2 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 8 months 2 weeks ago
View all comments

வாசகர் கருத்து