Idhayam Matrimony

பொற்கோவிலில் பஞ்சாப் மாஜி துணை முதல்வரை சுட்டுக்கொல்ல முயற்சி

புதன்கிழமை, 4 டிசம்பர் 2024      இந்தியா
Punjap 2024-12-04

Source: provided

சண்டிகர்: அமிர்தசரஸ் பொற்கோவிலில் பணியில் இருந்த, பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது நரேன் சிங் சவுரா என்பவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பஞ்சாபில் பலமுறை ஆட்சியில் இருந்த அகாலி தளம் கட்சியை சேர்ந்தவர் சுக்பிர் சிங் பாதல். முன்னாள் முதல்வர் மறைந்த பிரகாஷ் சிங் பாதலின் மகனான இவர், பஞ்சாபின் துணை முதல்வராக இருமுறையும், பிரோஸ்புர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாகவும் பதவி வகித்துள்ளார். 

சீக்கிய மதத்தை நிந்தனை செய்த, தேரா சச்சா சவுதா அமைப்பின் தலைவருக்கு, அப்போது துணை முதல்வராக இருந்த சுக்பிர் சிங் பாதல், தன் அதிகாரத்தை பயன்படுத்தி மன்னிப்பு வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

இந்த விவகாரங்களை சீக்கிய மதத்தின் உயரிய அமைப்பான அகாலி தக்த் விசாரித்தது. குற்றங்களை ஒப்புக்கொண்ட சுக்பிர் சிங் பாதல், அகாலி தக்த் முன் கடந்த ஆகஸ்டில் பகிரங்க மன்னிப்பு கோரினார். 

இதையடுத்து, அவருக்கு கடந்த 2-ம் தேதி தண்டனை அளிக்கப்பட்டது. அமிர்தசரஸ் பொற்கோவிலில் சுத்தம் செய்யும் பணியை சுக்பிர் சிங் பாதல் உள்ளிட்ட தலைவர்கள் நிறைவேற்றினர். 

அப்போது, சக்கர நாற்காலியில் வந்த சுக்பிர் சிங், நேற்று முன்தினம் தண்டனை விபரங்கள் அடங்கிய பதாகையை கழுத்தில் அணிந்து, கையில் ஈட்டி ஏந்தியபடி பொற்கோவிலின் வாயிலில் அமர்ந்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அமிர்தசரஸ் பொற்கோவிலில் பணியில் இருந்த, பஞ்சாப் மாஜி துணை முதல்வர் சுக்பிர் சிங் பாதல் மீது நரேன் சிங் சவுரா என்பவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

அருகே இருந்தவர்கள் உடனடியாக துப்பாக்கிச் சூடு நடத்திய நரேன் சிங் சவுராவை மடக்கி பிடித்ததால், குண்டு படாமல் அதிர்ஷ்டவசமாக சுக்பிர் சிங் பாதல் உயிர் தப்பினார். பஞ்சாப் போலீசார் நரேன் சிங் சவுராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.  துப்பாக்கிச்சூடு நடத்திய நரேன் சிங் சவுரா காலிஸ்தான் பயங்கரவாதி என போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து