எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பாரிஸ்: விரைவில் புதிய பிரதமரை அறிவிப்பேன் என்றும், 2027-ம் ஆண்டு மே மாதம், தனது பதவிக் காலம் முடியும் வரை அதிபர் பதவியில் நீடிப்பேன் என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் திட்டவட்டமாக தெரிவித்தார்.
பிரான்ஸ் நாட்டில் மூன்று மாதங்களுக்கு முன் பதவியேற்ற மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். நம்பிக்கையில்லா தீர்மானம் மீது ஓட்டெடுப்பு முன்னெடுக்கப்பட்டது.
ஓட்டெடுப்பில், 577 உறுப்பினர்களில் 331 பேர் பார்னியர் அரசுக்கு எதிராக ஓட்டளித்தனர். தீர்மானம் வெற்றி அடைந்ததால், பிரான்சில் ஆட்சி கவிழ்ந்தது. பிரான்ஸ் அதிபர் மேக்ரானும் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது,
2027-ம் ஆண்டு மே மாதம் தனது பதவிக் காலம் முடியும் வரை, அதிபர் பதவியில் நீடிப்பேன். விரைவில் புதிய பிரதமரை அறிவிப்பேன். நீங்கள் எனக்கு வழங்கிய பொறுப்பில், இறுதிவரை பணியாற்றுவேன்.
அடுத்த ஆண்டு துவக்கத்தில் பட்ஜெட் தயாரிக்கப்படும். பிரதமர் பர்னியரை வெளியேற்றுவதன் மூலம் குழப்பத்தை உருவாக்க இடதுசாரி கட்சிகள் முயற்சி செய்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


