முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல் பந்திலேயே அவுட்: ஜெய்ஸ்வால் மோசமான சாதனை

வெள்ளிக்கிழமை, 6 டிசம்பர் 2024      விளையாட்டு
Jaiswal 2024-02-02

Source: provided

அடிலெய்டு : 2-வது டெஸ்ட் போட்டியில் முதல் பந்திலேயே அவுட்டாகி ஆஸ்திரேலிய மண்ணில் ஜெய்ஸ்வால் மோசமான சாதனை படைத்துள்ளார். 

இந்தியா பேட்டிங்...

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடரின் 2-வது டெஸ்ட் போட்டி அடிலெய்டு மைதானத்தில் நேற்று  தொடங்கியது. பகலிரவு போட்டியாக நடைபெறும் இந்த ஆட்டத்திற்கான டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் ஆடிய இந்தியா தனது முதல் இன்னிங்சில் 180 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி அதிகபட்சமாக 42 ரன்கள் அடித்தார். ஆஸ்திரேலிய தரப்பில் அதிகபட்சமாக ஸ்டார்க் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இதனையடுத்து ஆஸ்திரேலியா தனது முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.

ஸ்டார்க் பந்துவீச்சில்.... 

இந்த ஆட்டத்தில் இந்தியாவின் முதல் இன்னிங்சில் தொடக்க ஆட்டக்காரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட் 0 (1) ஆனார். இதன் மூலம் அவர் 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரராக ஆஸ்திரேலிய மண்ணில் மோசமான சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். அதாவது, இந்த போட்டியில் முதல் பந்தை சந்தித்த அவர், ஸ்டார்க் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற ஒரு டெஸ்ட் போட்டியின் முதல் பந்தில் வீழ்ந்த முதல் இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை படைத்துள்ளார்.

முதல் பந்தில் ஆட்டம் இழந்தவர்கள்:

1) ஆர்ச்சி மெக்லாரன் (இங்கிலாந்து) - 1894.

2) ஸ்டான் வொர்திங்டன் (இங்கிலாந்து) - 1936.

3) ரோரி பர்ன்ஸ் (இங்கிலாந்து) - 2021.

4) யஷஸ்வி ஜெய்ஸ்வால் (இந்தியா) - 2024.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து