எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
நியூயார்க் : இந்தியா உள்ளிட்ட நாடுகள் முன்மொழிந்த தீர்மானத்தை ஏற்று, வரும் 21-ம் தேதியை சர்வதேச தியான தினமாக அனுசரிக்க ஐ.நா., பொது சபை ஒருமனதாக ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த 2014-ல், இந்தியாவின் முயற்சியை ஏற்று, ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அனுசரிக்கும் அறிவிப்பை ஐ.நா. வெளியிட்டது. இந்நிலையில், வரும் 21-ம் தேதி, சர்வதேச தியான தினமாக அனுசரிக்கக் கோரி, ஐ.நா. பொது சபையில் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்தியா, இலங்கை, நேபாளம், மெக்சிகோ உள்ளிட்ட நாடுகள் இதற்கான தீர்மானத்தை தாக்கல் செய்தன. இந்த தீர்மானம் ஒருமனதாக ஏற்கப்பட்டது. இதையடுத்து, இனி, டிச. 21-ம் தேதி உலகெங்கும், சர்வதேச தியான தினமாக அனுசரிக்கப்பட உள்ளது.
இதை, ஐ.நா.,வுக்கான இந்திய குழுவின் துாதர் பர்வதனேனி ஹரீஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். உலகமே ஒரு குடும்பம் எனப்படும் வசுதைவ குடும்பகம் என்பது இந்தியாவின் கோட்பாடு. உலக மக்களின் உடல் மற்றும் மன நலனில் இந்தியா அக்கறை கொண்டுள்ளது.
இதை உணர்த்தும் வகையிலே, மனநலன் மற்றும் அமைதியை ஏற்படுத்தும் தியானத்தை, சர்வதேச தினமாக கொண்டாட தீர்மானம் கொண்டு வரப்பட்டது என அவர் அதில் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |