முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பும்ராவுக்கு ஆஸி., வீரர் சவால்

வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2024      விளையாட்டு
Bumra 2023 08 18

Source: provided

பிரிஸ்பேன்: பார்டர் - கவாஸ்கர் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் நிலையில் பும்ராவுக்கு வீரர் நாதன் மெக்ஸ்வீனி சவால் விடுத்துள்ளார்.

இந்தியா வெற்றி... 

ஆஸ்திரேலியா - இந்தியா இடையே 5 போட்டிகள் கொண்ட பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. ஆனால் 2வது போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா தொடரை சமன் செய்து பதிலடி கொடுத்துள்ளது. அதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேற இந்தியா அடுத்த 3 போட்டிகளிலும் கட்டாயம் வென்றாக வேண்டிய இக்கட்டான சூழலில் உள்ளது. அந்த சூழலில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது போட்டி வரும் 14-ம் தேதி காபா மைதானத்தில் தொடங்க உள்ளது.

பும்ராவை எதிர்கொள்ள...

இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரரான நாதன் மெக்ஸ்வீனி பிரிஸ்பேன் மைதானத்தில் பும்ராவை மிகச்சிறப்பாக எதிர்கொள்ள உள்ளதாக கூறியுள்ளார். இந்த தொடரில் அறிமுகம் ஆன அவர் இதுவரை ஆட்டமிழந்துள்ள 3 முறையும் (முதல் போட்டியில் 2 முறை, 2-வது போட்டியில் 1 முறை) பும்ரா பந்து வீச்சிலேயே வீழ்ந்துள்ளார். இதனால் இம்முறை காபா மைதானத்தில் அவருக்கு பதிலடி கொடுப்பேன் என்று சவால் விடுத்துள்ளார்.

மிகவும் கடினமாக... 

இது குறித்து பேசிய அவர் கூறுகையில், "பும்ராவுக்கு எதிராக விளையாடும்போது மிகவும் கடினமாக இருந்தது. என்னுடைய கெரியரின் ஆரம்பத்திலேயே பும்ராவைப் போன்ற ஒரு பவுலரை எதிர்கொண்டு உள்ளேன். அதனால் இதை விட கடினமான சூழல் இருக்காது என்று கருதுகிறேன். அவருடைய ஆக்சன் வித்தியாசமாக இருக்கிறது. முதல் இரண்டு போட்டிகளில் அவரது பந்துவீச்சை எதிர்கொண்டதிலிருந்து நிறைய கற்றுக் கொண்டேன்.

அடுத்த போட்டியில்... 

நிச்சயம் அடுத்த போட்டியில் அவருக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன். முதல் தர கிரிக்கெட்டில் நான் இந்த மைதானத்தில்தான் அறிமுகமானேன். அதனால் இந்த மைதானத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று எனக்கு நன்றாக தெரியும். அதை வைத்து பும்ராவிற்கு பதிலடி கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்" என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 7 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 9 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 9 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து