எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
பிரிஸ்பேன் : இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோஷ் ஹசில்வுட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
இந்தியா வெற்றி...
ஆஸ்திரேலியா நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையில் ஏற்கனவே இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தன. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அடிலெய்டில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் இரு அணிகள் இடையிலான தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது.
ஜோஷ் ஹேசில்வுட்...
இதனிடையே இந்த இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் உள்ள காபா மைதானத்தில் நாளை (டிசம்பர் 14) தொடங்குகிறது. இந்த போட்டியில் வெற்றி பெற இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் 11 வீரர்கள் அடங்கிய பிளேயிங் 11 அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலியா தரப்பில் கடந்த போட்டியில் காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார்.
ஆஸ்திரேலிய அணி....
இதுதவிர அந் அணியில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் 11 அணியில்: உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 4 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 5 months ago |


