முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துபாய் கார் பந்தயத்தில் வெற்றி: நடிகர் அஜித்குமாருக்கு துணை முதல்வர் வாழ்த்து

திங்கட்கிழமை, 13 ஜனவரி 2025      தமிழகம்
Udayanidhi-1 2024-11-17

Source: provided

சென்னை : துபாயில் நடந்த கார் பந்தயத்தில் வெற்றி பெற்ற நடிகர் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

துபையில் நடைபெற்ற சர்வதேச அளவிலான 24எச் சீரிஸ் கார் பந்தயத்தில் அஜித்குமார் தலைமையிலான அஜித்குமார் ரேஸிங் அணி, 3-வது இடம்பிடித்து அசத்தியுள்ளது. விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய இரு படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொடுத்துவிட்டு கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வருகிறார் நடிகர் அஜித் குமார். சமீபத்தில் அஜித் குமார் ரேஸிங் என்ற கார் பந்தய அணியை அவர் உருவாக்கினார். இந்த அணி, துபை கார் பந்தயத்திலும் பங்கேற்றுள்ளது. தகுதிச்சுற்றில் 7-வது இடத்தைப் பிடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறிய அஜித் குமார் ரேஸிங் அணி, துபையில் நடைபெற்ற 992 பிரிவு கார் பந்தயத்தில் 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.

நடிகர் அஜித் குமாருக்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் அஜித் குமாருக்கு துணை முதல்வர் உதயநிதி மற்றும் நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். 

துணை முதல்வர் உதயநிதி: 2025 துபையில் நடைபெற்ற 24எச் கார் பந்தயம் 991 பிரிவில் அஜித் குமார் மற்றும் அவரது குழுவினர் 3-வது இடத்தைப் பிடித்ததை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். இந்த குறிப்பிடத்தக்க சாதனைக்காக அஜித்குமார் மற்றும் அவரது குழுவினருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமில்லாமல் அஜித்குமார் அணி திராவிட மாடல் அரசை காட்சிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் லோகோவை கார் பந்தயத்தின்போது பயன்படுத்தியதற்கு நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன். தொடர்ந்து பல வெற்றிகளை பெற்று நமது தேசத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் மென்மேலும் பெருமை சேர்க்க வேண்டுமென அஜித்குமார் மற்றும் அவரது குழுவை வாழ்த்துகிறேன்.

நடிகர் ரஜினிகாந்த்: அன்புள்ள அஜித்குமாருக்கு வாழ்த்துகள். நீங்கள் சாதித்துக்காட்டியுள்ளீர்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும். மிகுந்த அன்புகள் எனப் பதிவிட்டுள்ளார்.

ஓ.பன்னீர்செல்வம்:  3-வது இடத்தைப் பிடித்த அஜித்குமார் அணியினருக்கும் அஜித் குமாருக்கும் எனது பாராட்டுக்கள். அவரும், அவரது அணியினரும் மேலும் பல‌‌ வெற்றிகளை குவிக்க எனது நல்வாழ்த்துகள்.

நடிகர் கமல்ஹாசன்: அஜித்குமாரின் பந்தய அணியினர் அபாரமான சாதனையை நிகழ்த்தியுள்ளனர். எனது நண்பர் அஜித்குமார் தனக்கு பிடித்த விஷயங்களுக்கான எல்லைகளை விரிவு படுத்திக்கொண்டே செல்கிறார். இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு இது ஒரு முக்கியமான மற்றும் பெருமைமிகு தருணம். என்று அவருக்கு இன்னும் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து