முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய ராணுவ தினம் கொண்டாட்டம்: ஜனாதிபதி, பிரதமர் மோடி வாழ்த்து

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      இந்தியா
Murmu 2023 04 18

புதுடெல்லி, தேசிய ராணுவ தினம் கொண்டாடப்பட்டதையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1949-ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி, சுதந்திர இந்தியாவின் முதல் ராணுவ தளபதியாக, ஜெனரல் கே.எம். கரியப்பா பொறுப்பேற்றார். சுமார் 200 ஆண்டு கால பிரிட்டிஷ் ஆட்சிக்குப் பிறகு இந்திய ராணுவத்தின் கட்டுப்பாடு இந்தியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. இந்தியாவின் கடைசி பிரிட்டிஷ் தளபதி ஜெனரல் எப்.ஆர்.ஆர். புச்சரிடமிருந்து ஜெனரல் கரியப்பா இந்த உயரிய பொறுப்பை ஏற்றார்.

இதனை நினைவு கூறும் விதமாக ஆண்டுதோறும் ஜனவரி 15-ம் தேதி இந்திய ராணுவ தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ராணுவ வீரர்கள் மற்றும் போரில் உயிர்நீத்த தியாகிகளுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது. அவ்வகையில் இந்த ஆண்டு நேற்று ராணுவ தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஜனாதிபதி திரெளபதி முர்மு, பிரதமர் மோடி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி திரெளபதி முர்மு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி:  நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதிலும், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதிலும் ராணுவ வீரர்களின் அர்ப்பணிப்பு அனைவருக்கும் ஒரு உத்வேகமாக இருக்கிறது. உங்கள் வீரமும் துணிச்சலும் வரும் தலைமுறைகளுக்கு தொடர்ந்து உத்வேகமாக இருக்கட்டும். இவ்வாறு ஜனாதிபதி கூறி உள்ளார்.

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:- ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வீரர்களின் தியாகங்களையும் நாம் நினைவுகூறுகிறோம். நமது எல்லைகளைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், இயற்கை பேரிடர்களின் போது மனிதாபிமான உதவிகளை வழங்குவதிலும் முத்திரை பதித்துள்ளது. இவ்வாறு மோடி கூறி உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து