முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய சுதந்திரம் குறித்து கருத்து: மோகன் பாகவத்துக்கு ராகுல் காந்தி கண்டனம்

புதன்கிழமை, 15 ஜனவரி 2025      இந்தியா
Rahul 2024-12-03

புதுடெல்லி, ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத் துரோகமாகும் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

டில்லியில் தீன் தயாள் உபாத்யாய சாலையில் 2009 ஆம் ஆண்டிலிருந்து கட்டப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான இந்திரா பவனை  நேற்று காங்கிரஸ் எம்.பி. சோனியா காந்தி குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தார்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் பொதுச்செயலர்கள் பிரியங்கா காந்தி, சி.வேணுகோபால் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியினரும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் ராகுல் காந்தி பேசுகையில், “1947-ல் இந்தியா சுதந்திரம் பெறவில்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் கூறிய கருத்து ஒவ்வொரு இந்தியரை அவமதிக்கும் செயல். ராமர் கோவில் கட்டப்பட்ட பிறகு இந்தியா சுதந்திரம் அடைந்ததாக மோகன் பாகவத் கூறிய கருத்து தேசத்துரோகமாகும்” என்றார்.

இந்தூரில் நடைபெற்ற ஸ்ரீராம் ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் பொதுச் செயலர் சம்பத் ராய்க்கு விருது வழங்கும் விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசும்போது, “அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்ட நாளில் தான் இந்தியா உண்மையான சுதந்திரத்தை அடைந்தது. ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை தினத்தை ‘பிரதிஷ்டா துவாதசி’யாக கொண்டாட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து