முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா கோலாகலம்

செவ்வாய்க்கிழமை, 4 பெப்ரவரி 2025      ஆன்மிகம்
Tirupati 2023-09-19

Source: provided

திருப்பதி : ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி திருவிழாவில் பக்தர்கள் வாகன சேவைகளை தரிசனம் செய்தனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மினி பிரம்மோற்சவம் எனப்படும் ரத சப்தமி விழா நேற்று விமரிசையாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி சிறப்பு வாகன சேவைகள் நடைபெறுகின்றன. நேற்று ஒரே நாளில் ஏழுமலையான் 7 வாகனங்களில் 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். அதன்படி, அதிகாலை 5.30 மணி முதல் 8 மணி வரை ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வந்தார். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் 4 மாட வீதிகளில் காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து 9 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், மதியம் 1 மணிக்கு பிறகு அனுமந்த வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பகல் 2 மணி முதல் 3 மணி வரை கோவில் வளாகத்தில் உள்ள புஷ்கரணியில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடந்தது. தீர்த்தவாரி முடிந்தவுடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புஷ்கரணியில் புனித நீராடுவார்கள். அதன்பின்னர் மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்ப விருட்ச வாகனம், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனம், 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரபை வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருள்கிறார். பக்தர்களின் வசதிக்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. கூட்டத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ஆயிரக்கணக்கான போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலன்ஸ் அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து