எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை: முதல்வர் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.
மத்திய அரசு திட்டங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கவும், அந்த திட்டங்களை சிறப்பான முறையில் நடைமுறைப்படுத்தவும் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ம.தி.மு.க. எம்.பி. துரை வைகோ, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், எம்.ஜி.ஆருக்கு நெருக்கமாக இருந்தவருமான செங்கோட்டையனின் பேச்சும், செயல்பாடுகளும் கடந்த சில நாட்களாக அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. இந்த சூழலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |