முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒத்த ஓட்டு முத்தையா விமர்சனம்

திங்கட்கிழமை, 17 பெப்ரவரி 2025      சினிமா
Otha-Otu-Muthaiah-Review 17

Source: provided

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஒரே ஒரு ஓட்டு வாங்கியதால், ’ஒத்த ஓட்டு முத்தையா’ என்று அழைக்கப்படும் அரசியல்வாதி கவுண்டமணி, தனது மூன்று தங்கைகளுக்கும் ஒரே குடும்பத்தில் பிறந்த மூன்று சகோதர்களுக்கு திருமணம் செய்து வைக்கும் முடிவில் இருக்கிறார். மறுபக்கம் கவுண்டமணிக்கு சீட் கொடுக்காமல்  அவரது கார் ஓட்டுநர் யோகி பாபுக்கு கட்சி  மேலிடம் சீட் கொடுத்து அவரை அவமானப்படுத்தி விடுகிறது. அதனால் கோபமடைந்து கட்சியில் இருந்து வெளியேறி சுயேட்சையாக போட்டியிடுகிறார் கவுண்டமணி, அவர் தேர்தலில் வெற்றி பெற்றாரா?, அவரது தங்கைகளின் திருமணம் எப்படி நடந்தது என்பதை அரசியல் கலந்து நகைச்சுவையாக சொல்லும் படமே ஒத்த ஓட்டு முத்தையா. கவுண்டமணியின் கவுண்டர்கள் வழக்கம் போல் ரசிகர்களை சிரிக்க வைக்கிறது. அவருடன் கூட்டணி அமைத்துள்ள யோகி பாபுவின் காமெடி நம்மை ஏமாற்றிச் செல்கிறது. வாசன் கார்த்திக்,  அன்பு மயில்சாமி, கஜேஸ் நாகேஷ், ரவிமரியா, மணவை பொன் மாணிக்கம் என படத்தில் நடித்த அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்கள்.  சித்தார்த் விபின் இசையில், சினேகன், மோகன்ராஜா, சாய் ராஜகோபால் வரிகளில் பாடல்கள் ஓகே ரகம். எழுதி இயக்கியிருக்கும் சாய் ராஜகோபால், கவுண்டமணியை வைத்துக்கொண்டு அரசியல் நையாண்டி செய்ய முயற்சித்திருக்கிறார். மொத்தத்தில், ஒத்த ஓட்டு முத்தையா ம்.. ஒகே ரகம்.. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 9 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 9 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 11 months 3 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 11 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து