முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரிஷப் பந்த்துக்கு புகழாரம்

வெள்ளிக்கிழமை, 14 மார்ச் 2025      விளையாட்டு
Rishabh-Pant 2023-12-12

Source: provided

இந்த ஆண்டு ஐ.பி.எல்.  தொடர் இன்னும் ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. ஐ.பி.எல்.  தொடரில் மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை எதிர்த்து விளையாடுகிறது. விரைவில் ஐ.பி.எல்.  தொடர் தொடங்கவுள்ள நிலையில், அனைத்து அணிகளும் தங்களது பயிற்சியை தீவிரப்படுத்தியுள்ளன. கடந்த சீசன் வரை தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த், ஐ.பி.எல்.  மெகா ஏலத்தில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டு அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

விரைவில் ஐ.பி.எல்.  தொடங்கவுள்ள நிலையில், ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் என மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்தின் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது. இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரிஷப் பந்த் மிகவும் தனித்துவமான வீரர். அவர் பேட்டிங் செய்து ரன்கள் சேர்க்கும் மிகவும் தனித்துவமாக இருக்கும். ஆஸ்திரேலிய அணி வீரர் ஜோஷ் இங்கிலிஷும் சிறந்த வீரர். அவர் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் சிறப்பாக விளையாடினார். தற்போது பல இளம் விக்கெட் கீப்பர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர் என்றார். மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான தினேஷ் ராம்தின் சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

__________________________________________________________________________________________________

அரையிறுதிக்கு சபலென்கா தகுதி

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ள இண்டியன்வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் நம்பர் 1 வீராங்கனையான அரினா சபலென்கா (பெலாரஸ்), சம்சோனோவா (ரஷியா) உடன் மோதினார். இதில் தொடக்கம் முதலே சிறப்பாக விளையாடிய சபலென்கா 6-2 மற்றும் 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இவர் அரையிறுதியில் மேடிசன் கீஸ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார். 

__________________________________________________________________________________________________

இன்சமாம் உல்ஹக் வலியுறுத்தல்

வரும் 22-ம் தேதி 18-வது ஐ.பி.எல்.  சீசன் தொடங்க உள்ளது. 10 அணிகள் பங்கேற்று விளையாடும் இந்த தொடர் உலக அளவில் நடைபெறும் விளையாட்டு தொடர்களில் முக்கியமானதாக அமைந்துள்ளது. உள்நாடு மற்றும் வெளிநாடு என உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கமிக்கும் களமாக ஐ.பி.எல்.  உள்ளது. இந்த நிலையில் இன்சமாம் அது குறித்து பேசியுள்ளார்.

“உலக கிரிக்கெட்டின் சிறந்த வீரர்கள் அனைவரும் ஐ.பி.எல்.  கிரிக்கெட்டில் பங்கேற்று விளையாடுகின்றனர். ஆனால், மற்ற நாடுகளில் நடைபெறும் லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் பங்கேற்பது இல்லை. அதனால் அனைத்து கிரிக்கெட் வாரியங்களும் தங்கள் நாட்டு வீரர்கள் ஐ.பி.எல்.  கிரிக்கெட்டில் பங்கேற்பதை தடுக்க வேண்டும். மற்ற நாடுகளில் நடைபெறும் கிரிக்கெட் லீக்கில் பங்கேற்க இந்திய வீரர்களுக்கு அனுமதி இல்லாத போது அதையே தான் மற்ற நாட்டு வாரியங்களும் செய்ய வேண்டும்.” என இன்சமாம் கூறியுள்ளார்.

__________________________________________________________________________________________________

ஹோலி பண்டிகை கொண்டாட்டம்

ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் உலகக் கோப்பையுடன் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. வட இந்தியாவில் பெரியளவில் கொண்டாடப்படும் ஹோலி பண்டிகையை முன்னிட்டு ஊர்வலங்கள் நடத்தப்படும். ஒருவருக்கொருவர் வண்ணப்பொடிகளைத் தூவி கொண்டாடத்தில் ஈடுபடுவர். வட இந்தியா மட்டுமின்றி நாடு முழுவதும், ஏன் உலங்கெங்கிலும் உள்ள இந்தியர்கள் இந்தப் பண்டிகையை கோலாகலமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் மெல்பர்னில் வாழும் இந்தியர்களுக்காக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா வென்ற உலகக் கோப்பையுடன் சுய புகைப்படம் எடுத்துக்கொள்ள அனைவருக்கும் வழங்கியுள்ளது. அதுமட்டுமின்றி, பிக் பாஷ் லீக் மற்றும் மகளிர் பிக் பாஷ் போட்டிகளுக்கான பொருள்கள், ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொப்பிகள் உள்ளிட்ட பரிசுப் பொருள்களையும் வழங்கி ஹோலி கொண்டாட்டங்களை மேலும் வண்ணமயமாக்கியிருக்கிறது ஆஸ்திரேலிய கிரிகெட் வாரியம்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 8 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 8 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 10 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 10 months ago
View all comments

வாசகர் கருத்து