முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வியட்நாம் மீது திடீர் பாசம் ஏன்? - ராகுல் காந்திக்கு பா.ஜ.க. கேள்வி

சனிக்கிழமை, 15 மார்ச் 2025      இந்தியா
BJP 2023 04 10

Source: provided

புதுடில்லி : காங்கிரஸ் கட்சி எம்.பி.யும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி அவரது தொகுதியை விட, வியட்நாமில் அதிக நேரம் செலவிட்டுள்ளார். வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து விளக்க வேண்டும் என பா.ஜ.க.  தலைவர்களில் ஒருவரான  ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:-

ராகுல் காந்தியை எங்கே? அவர் வியட்நாம் சென்றுள்ளதாக கேள்விப்படுகிறேன். அவர் தன்னுடைய சொந்த மக்களவை தொகுதியில் நீண்ட நேரம் செலவழிப்பதில்லை. திடீரென வியட்நாம் மீது அதிக பாசம் வைப்பதற்கான காரணம் என்ன?

வியட்நாம் மீதான அசாதாரண பாசம் குறித்து ராகுல் காந்தி விளக்க வேண்டியது அவசியம். அவர் அங்கே அடிக்கடி செல்வது மிகவும் வினோதமானது. ராகுல் காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர். அவர் இந்தியாவில் இருக்க வேண்டும்.

இவ்வாறு ரவி சங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.  ஐடி துறை தலைவர் அமித் மாள்வியா எக்ஸ் பக்கத்தில் "எதிர்க்கட்சித் தலைவர் என்ற முக்கிய பதவியை ராகுல் காந்தி வகிக்கிறார். மேலும் அவர் மேற்கொண்ட ஏராளமான ரகசிய வெளிநாட்டுப் பயணங்கள், குறிப்பாக நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும்போது தேசியப் பாதுகாப்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புகின்றன." எனத் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து