முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எனக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை - மம்மூட்டி விளக்கம்

திங்கட்கிழமை, 17 மார்ச் 2025      சினிமா
Mammootty 2024-09-01

Source: provided

கேரளா : எனக்கு புற்றுநோய் பாதிப்பு இல்லை என்று மம்மூட்டி விளக்கமளித்துள்ளார்.

மலையாள திரையுலகில் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகர் மம்மூட்டி. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான டொமினிக் அண்ட் தி லேடி பர்ஸ் திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்ததாக பஸூகா திரைப்படம் வரும் அடுத்த மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நடிகர் மம்மூட்டி-க்கு புற்று நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்ற தகவல் இணையத்தில் பரவி வந்தது அதற்காக மம்மூட்டி படப்பிடிப்பில் இருந்து ஓய்வு எடுத்து வருகிறார் எனவும் கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மமூட்டி தரப்பினர் பதிலளித்துள்ளனர் அதில்  இது முற்றிலும் தவறான செய்தி. அவர் நலமாக இருக்கிறார். ரமலான் மாதம் என்பதால் அவர் அதற்காக நோன்பு இருந்து வருகிறார். அதனால் படப்பிடிப்பில் இருந்து தற்காலிக ஓய்வு எடுத்து வருகிறார். மேலும் இந்த ஓய்வு முடிந்த பிறகு அவர் மகேஷ் நாராயணன் படப்பிற்கு செல்வார்" என கூறியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து