எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
டெல்லி: இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். சந்திப்பு குறித்து பிரதமர் மோடி, சிம்பொனி வேலியண்ட்டை வழங்கி மீண்டும் வரலாறு படைத்துள்ளார் இசைஞானி இளையராஜா என்று அவருக்கு புகழாரம் சூட்டிள்ளார்.
1976-ம் ஆண்டு தேவராஜ்-மோகன் இயக்கத்தில் வெளியான 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவர் இதுவரை தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உட்பட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். சமீபத்தில் இவரது இசையில் வெளியான ''விடுதலை 2' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இவர் கடந்த மார்ச் 8-ந் தேதி லண்டனில் 'வேலியண்ட்' சிம்பொனியை அரங்கேற்றம் செய்தார். இதன்மூலம், முழு அளவிலான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றம் செய்த முதல் இந்தியர் என்ற சாதனையை இளையராஜா படைத்தார். இந்தியாவிற்கே பெருமை பெற்றுத்தந்த இளையராஜாவுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்தன. இதற்கிடையில், இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடத்த உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். மேலும் அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் 'பிரதமர் மோடி உடனான சந்திப்பு, எனக்கு மறக்க முடியாத நிகழ்வாக அமைந்துள்ளது. எனது சிம்பொனி வேலியண்ட் உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவரது பாராட்டு மற்றும் ஆதரவால் பணிவுகொள்கிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து பிரதமர் மோடியும் தனது எக்ஸ் தளத்தில் இளையராஜாவுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதில், 'பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் இளையராஜாவை சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இசைஞானியான அவரது மேதைமை நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எல்லா வகையிலும் முன்னோடியாக இருக்கும் அவர், சில நாட்களுக்கு முன் லண்டனில் தனது முதலாவது மேற்கத்திய செவ்வியல் சிம்பொனியான வேலியண்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார். இந்த நிகழ்ச்சி, உலகப் புகழ்பெற்ற ராயல் பில்ஹார்மோனிக் இசைக்குழுவுடன் இணைந்து நடத்தப்பட்டது. இந்த முக்கியமான சாதனை, அவரது இணையற்ற இசைப் பயணத்தில் மற்றொரு அத்தியாயத்தைக் குறிக்கிறது - உலக அளவில் தொடர்ந்து மேன்மையுடன் விளங்குவதை இது எடுத்துக்காட்டுகிறது ' என்று பதிவிட்டுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 6 months 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 7 months 4 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 7 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-04-2025
22 Apr 2025 -
பாக். கிரிக்கெட் வாரியம் மறுப்பு
21 Apr 2025செப்டம்பர் 29 முதல் அக்டோபர் 26 வரை இந்தியாவில் ஐ.சி.சி.
-
அடுத்த சீசனுக்கு ஆடும் லெவனை தயார் செய்ய வேண்டும்: கேப்டன் தோனி
21 Apr 2025மும்பை : நடப்பு ஐ.பி.எல். சீசனில் 6-வது தோல்வியை பதிவு செய்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
-
சென்னையை பந்தாடிய 16 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய மும்பை
21 Apr 2025மும்பை : வான்கடேவில் மும்பை இந்தியன்ஸின் ஆதிக்கம் நீடித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை 16 ஓவர்களில் எட்டி வெற்றியை ருசித்தது.
-
கோலி சாதனைகளை முறியடித்த ரோகித்
21 Apr 2025மும்பை : சி.எஸ்.கே.வுக்கு எதிரான போட்டியில் கோலி, தவான் சாதனைகளை ரோகித் சர்மா முறியடித்தார்.
-
சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே கேப்டனாக இருந்திருக்க வேண்டும்: ஹர்பஜன் சிங்
21 Apr 2025மும்பை : சுரேஷ் ரெய்னா சி.எஸ்.கே. அணியின் கேப்டனாக இருந்திருக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
மும்பை வெற்றி...
-
வீரர்களின் ஒப்பந்த விவரம் வெளியீடு: ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன் சேர்ப்பு
21 Apr 2025மும்பை : இந்திய ஆடவர் கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்களின் ஆண்டு ஒப்பந்த விவரத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வெளியிட்டுள்ளது.
-
சி.எஸ்.கே. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? அம்பத்தி ராயுடு பதில்
21 Apr 2025சென்னை : சி.எஸ்.கே. மீண்டும் வெற்றிப் பாதைக்கு திரும்புமா? என்ற கேள்விக்கு அந்த அணியின் முன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு பதிலளித்துள்ளார்.
-
ரோகித்தின் பார்ம் பற்றி கவலைப்பட தேவையில்லை: பாண்ட்யா நிம்மதி
21 Apr 2025மும்பை : ரோகித் சர்மாவின் பார்ம் குறித்து கவலை கொள்ள அவசியமே இல்லை என மும்பை கேப்டன் பாண்ட்யா தெரிவித்துள்ளார்.
-
பிளே-ஆப் சுற்றுக்கு செல்லுமா சி.எஸ்.கே.?
21 Apr 2025சென்னை : எஞ்சிய 6 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான நிலைக்கு சி.எஸ்.கே. தள்ளப்பட்டுள்ளது.
-
நிரந்தர செவிலியர்களுக்கு இணையாக சம்பளம்: தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவு
22 Apr 2025சென்னை : தொகுப்பூதிய செவிலியர்களுக்கும் நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது
-
பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து உரிய நேரத்தில் முடிவெடுக்கப்படும் : சட்டசபையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
22 Apr 2025சென்னை : அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டம் விவகாரத்தில் உரிய நேரத்தில், உரிய முடிவை அரசு எடுக்கும் என்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ள
-
புதுச்சேரியில் பேருந்து நிலையத்தை திறக்க கோரி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
22 Apr 2025புதுச்சேரி : புதுச்சேரியில் கட்டி முடிக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை திறக்க வலியுறுத்தி அ.தி.மு.க. மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
-
கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கின் முக்கிய குற்றவாளிகளுக்கு ஜாமீன் : சென்னை ஐகோர்ட் உத்தரவு
22 Apr 2025சென்னை : கள்ளக்குறிச்சி விஷ சாராய வழக்கில் முக்கிய குற்றவாளிகளான தாமோதரன், கன்னுக்குட்டி ஆகியோருக்கு சென்னை ஐகோர்ட் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
-
பென்னாகரம் புளிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை: அமைச்சர் உறுதி
22 Apr 2025சென்னை : பென்னாகரம் புளிக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தா.மோ.அன்பரசன் தெரிவித்துள்ளார்.
-
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு துறைகளில் வேலைவாய்ப்பு : துணை முதல்வர் உதயநிதி தகவல்
22 Apr 2025சென்னை : விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100 வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதல்வர் உதயநிதி தெரிவி
-
பேச அனுமதி கொடுக்கவில்லை என்பது ஜனநாயக படுகொலை : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
22 Apr 2025சென்னை : தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி கொடுக்கவில்லை என்பது ஜனநாயக படுகொலை என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 
-
நிஷிகாந்த் துபே கருத்துக்கு எதிரான மனு: அடுத்த வாரம் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்
22 Apr 2025புதுடெல்லி : சுப்ரீம் கோர்ட் மற்றும் தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவை விமர்சித்து பா.ஜ.க.
-
சென்னையில் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
22 Apr 2025சென்னை : சென்னையில் வரும் 25-ம் தேதி அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
-
ஊட்டி துணைவேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத்தலைவர் பங்கேற்பு : ஆளுநர் மாளிகை அறிவிப்பு
22 Apr 2025சென்னை : ஊட்டியில் வரும் ஏப்.25, 26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டு மாநாட்டினைத் தொடங்கி
-
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி
22 Apr 2025ஸ்ரீநகர் : ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஒருவர் பலியாகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
மோசடி வழக்கில் நடிகர் மகேஷ் பாபுவுக்கு அமலாக்கத்துறை சம்மன்
22 Apr 2025ஹைதராபாத் : ரியல் எஸ்டேட் நிறுவன நிதி மோசடி தொடர்பான வழக்கில் வரும் 28-ம் தேதி ஹைதராபாத் அலுவலகத்தில் ஆஜராக வேண்டுமென தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுக்கு அமலாக்கத்துறை
-
போப் பிரான்சிஸ் இறுதி அஞ்சலி நிகழ்வில் தமிழக அரசு சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்பு
22 Apr 2025சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில், தமிழக அரசின் சார்பில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துற
-
யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வில் உ.பி.யை சேர்ந்த மாணவி முதலிடம்
22 Apr 2025புதுடெல்லி : 2024 ஆம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. சிவில் சர்வீஸ் தேர்வின் இறுதி முடிவுகள் (ஏப். 22) வெளியிடப்பட்டுள்ளன.
-
ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்ட ஜே.டி.வான்ஸ்
22 Apr 2025ஜெய்ப்பூர் : இந்தியா வந்துள்ள அமெரிக்கா துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ், நேற்று குடும்பத்துடன் ஜெய்ப்பூர் ஆம்பர் கோட்டையை பார்வையிட்டார்.