முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்பட்ட ரெயில்வே தேர்வு-தேர்வர்கள் அதிர்ச்சி

புதன்கிழமை, 19 மார்ச் 2025      இந்தியா
IAS-IPS 2024-03-28

Source: provided

புதுடெல்லி : ரெயில்வே துறையில் காலியாக உள்ள லோகோ பைலட் உள்ளிட்ட பணிகளுக்கு, குரூப்-டி நிலையிலான காலிப்பணியிடங்களுக்கான தேர்வு நேற்று (புதன்கிழமை) நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நாடு முழுவதும் நேற்று நடைபெறவிருந்த ரெயில்வே உதவி லோகோ பைலட் தேர்வு கடைசி நேரத்தில் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வு மையங்களுக்குச் சென்ற தேர்வர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

ரெயில்வேயில் உதவி லோகோ பைலட் 18,799 பணியிடங்களுக்கு முதல்நிலை கணினித் தேர்வு முடிவடைந்து முடிவுகள் வெளியான நிலையில், அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேற்றும், இன்றும் (மார்ச் 19, 20) இரண்டாம் நிலை கணினித் தேர்வு (CBT 2) நடைபெற இருந்தது.

இதற்காக தேர்வர்கள் நேற்று காலையே தேர்வு மையங்களுக்குச் சென்றனர். ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுக்கு சற்று நேரம் முன்னதாக அறிவிக்கப்பட்டது. மேலும் நேற்று நடைபெறவிருந்த தேர்வு வேறு நாளில் நடத்தப்படும் என்றும் அதுகுறித்த அறிவிப்பு ரெயில்வே தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியாகும் என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்வு எழுத சென்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பால் தேர்வர்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து