முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சூதாட்ட செயலி விளம்பர விவகாரம்: விஜய் தேவரகொண்டா உள்பட 25 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு

வியாழக்கிழமை, 20 மார்ச் 2025      இந்தியா
Cort 2023 04 17

Source: provided

ஐதரபாத்: சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக தெலுங்கு நடிகர்கள் ராணா டகுபதி, விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் மீது சைபராபாத் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

சூதாட்ட செயலிகளை விளம்பரப்படுத்தியதாக விஜய் தேவரகொண்டா உள்பட 25 நடிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தெலுங்கானாவில் உள்ள மியாப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் பனீந்திரா ஷர்மா. இவர் சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்திய தெலுங்கு நடிகர்கள் மற்றும் சமூக வலைத்தள பிரபலங்கள் மீது சைபராபாத் போலீசார் புகார் அளித்துள்ளார். அதில், "தன்னுடைய காலனியைச் சேர்ந்த இளைஞர்களிடம் பேசும்போது, சினிமா பிரபலங்கள், சமூக வலைத்தள பிரபலங்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் விளம்பரப்படுத்தும் சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து இருக்கிறார்கள்.

இந்த சூதாட்ட செயலிகளில் பலரும் பணத்தை இழந்துள்ளனர். நானும் பாதிக்கப்பட்டுள்ளேன். சமூக வலைதளங்களில் பிரபலங்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளை விதிகளை மீறி விளம்பரப்படுத்துகிறர்கள். இதனால் பணத்தேவை உடையவர்கள் இதுபோன்ற சூதாட்ட செயலிகளில் பணத்தை முதலீடு செய்து ஏமாற்றப்படுகிறார்கள். இதை விளம்பரப்படுத்தும் பிரபலங்கள் பெரிய அளவில் தொகையை பெற்றுக்கொள்கிறார்கள். எனவே சட்ட விரோதமாக இந்த செயலிகளை பிரபலப்படுத்தும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் கூறியிருந்தார். 

இந்த புகாரின் அடிப்படையில் சூதாட்ட செயலியை விதிகளை மீறி விளம்பரப்படுத்தியதாக நடிகர்கள் பிரகாஷ் ராஜ், விஜய் தேவரகொண்டா, ராணா டகுபதி, நிதி அகர்வால் உள்ளிட்ட 25 பேர் மீது சைபராபாத் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெலுங்கு திரையுலகில் முன்னணியில் இருக்கும் நடிகர்கள் உள்பட 25 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது தெலுங்கு திரைப்பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து