முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு: 2 பலி; 6 பேர் காயம்

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025      உலகம்
America-1 2023-08-29

Source: provided

ப்ளோரிடா : அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகத்தில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் பலியாகினர். 6 பேர் காயமடைந்தனர். இவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக ஒருவரை சந்தேகத்தின் பேரில் போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பில், ப்ளோரிடா பல்கலைக்கழக வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இதில் இருவர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் பல்கலை. மாணவர்கள் இல்லை என்பது உறுதியாகியுள்ளது. மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவத் துறை தெரிவித்துள்ளது. ஒருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ப்ளோரிடா பல்கலைக்கழகம் சர்வதேச புகழ் பெற்ற கல்வி நிலையமாக அறியப்படுகிறது. இங்கு பல்வேறு நாடுகளில் இருந்தும் 42 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் பயில்கின்றனர். இந்நிலையில் அங்கு துப்பாக்கிச் சூடு நடந்தது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ட்ரம்ப் கண்டனம்: ப்ளோரிடா பல்கலைக்கழக துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துக்கு, “இது ஒரு மோசமான சம்பவம். இப்படியான சம்பவங்கள் நடப்பது கொடுமையானது.” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து