முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாட்டில் டாஸ்மாக் வருவாய் ரூ. 48,344 கோடியாக அதிகரிப்பு

செவ்வாய்க்கிழமை, 22 ஏப்ரல் 2025      தமிழகம்
Tasmac-QR-line 2024-03-25

Source: provided

சென்னை : கடந்த 2024-2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் டாஸ்மாக் விற்பனை கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.2,489 கோடி அதிகரித்துள்ளதாக தமிழக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தமிழ்நாட்டில் கடந்த 2024 – 2025ம் நிதியாண்டில் டாஸ்மாக் மூலம் 48,344 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் கிடைத்துள்ளது.

2021 -2022ம் நிதியாண்டில் ரூ. 36,050 கோடியும், 2022 - 2023ம் நிதியாண்டில் ரூ.44,121 கோடியும், 2023 - 2024ம் நிதியாண்டில் ரூ.45,855 கோடியும், 2024 – 2025ம் நிதியாண்டில் ரூ.48,344 கோடியும் வருவாய் கிடைத்துள்ளது. இதன்படி 2023 - 2024ம் நிதியாண்டை விட, 2024 - 2025ம் நிதியாண்டில் ரூ.2489 கோடி ரூபாய் வருவாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

அயல்நாட்டு மதுபானங்களை இறக்குமதி செய்ததன் மூலமாக 2024-25 -ஆம் ஆண்டில் (31.03.2025 வரை) சிறப்புக் கட்டணமாக அரசுக்கு ரூ.62.88 கோடி மற்றும் சேவைக் கட்டணமாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்திற்கு ரூ.32.52 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.மேலும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மூலம் தமிழ்நாட்டில் இருந்து வெளிமாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், வெளி நாடுகளுக்கு பீர் ஏற்றுமதி செய்ய அரசு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளது.

கடந்த 2024 - 2025 ஆம் ஆண்டில் (31 மார்ச் 2025 வரை), மற்ற மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்கள், பிற நாடுகளுக்கு 21,80,465 பெட்டிகள் (cases) பீர் ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் மூலம் ரூ.777.07 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு பீர் ஏற்றுமதி செய்வதற்கான அனுமதி இணைய வழியாக வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 59 min ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 1 hour ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 12 months 2 hours ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 12 months 3 hours ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து