முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

'தொடரும்’ திரை விமர்சனம்

திங்கட்கிழமை, 12 மே 2025      சினிமா
To-arum-vimarca-am 2023 05

Source: provided

பாரதிராஜா விடம் ஸ்டண்ட் நடிகராக பணியாற்றிய மோகன்லால், ஒரு விபத்தால் அதனை விட்டுவிட்டு தேனியில், வாடகை கார் ஓட்டுநராக, தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார். மனைவி, ஒரு மகள், ஒரு மகன் என அளவான குடும்பம், அது தான் தன் உலகம் என்று வாழும் மோகன்லாலுக்கு அவரது பழைய அம்பாசிட்ட கார் மீதும் மிகுந்த ஆர்வத்தோடு பார்த்து வருகிறார்.

இதற்கிடையே, மோகன் லால் ஊரில் இல்லாத போது, அவரது காரை போலீஸ் பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் வைத்துவிடுகிறது. ஊரில் இருந்து திரும்பும் மோகன்லால் காரை மீட்க போராடுகிறார். சப்-இன்ஸ்பெக்டர் காரை கொடுக்க முடியாது என்று முரண்டு பிடித்தாலும், போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணை காட்டி காரை திரும்ப ஒப்படைக்கிறார். அதே சமயம், அந்த காருடன் மோகன்லால், இன்ஸ்பெக்டர் மற்றும் இரண்டு காவலர்களுடன் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது.

அந்த இரவு பயணம் மோகன்லால் வாழ்க்கையில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் பயணமாக அமைகிறது. அது என்ன? என்பதை யூகிக்க கூடிய விதத்தில் சொன்னாலும், கதையோடு பார்வையாளர்களையும் பயணிக்க வைக்கும் விதத்தில் சொல்வதே ‘தொடரும்’ திரை படம்.

மோகன்லால் பென்ஸ் என்கிற சண்முகம் என்ற கதாபாத்திரத்தில் பொறுப்பான குடும்ப தலைவராக நடித்திருக்கும் மோகன்லால், பிள்ளைகளிடம் எதார்த்தமாக பழகுவது, சிறு சிறு குறும்புத்தனம் மூலம் மனைவியிடம் காதலை வெளிப்படுத்துவது என்று ரசிக்க வைக்கிறார். தனக்கு ஏற்பட்ட பிரச்சனைக்கு பழி தீர்ப்பதற்காக ஆக்ரோஷமாக களம் இறங்கும் போது, மாஸாக மிரட்டுபவர் சண்டைக்காட்சிகளில் கூட சிறந்த நடிகராக கவனம் ஈர்க்கிறார்.

சமூகப் பிரச்சனையை மேலோட்டமாக சொல்லியிருந்தாலும், அதை மோகன்லால் போன்ற முன்னணி நடிகர்கள் மூலம் சொல்லியிருப்பதால் இயக்குநர் சொல்ல வந்த விசயம் மக்கள் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.

மொத்தத்தில் இந்த ‘தொடரும்’ அனைத்து மக்களாலும் போற்றப்படும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 2 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 2 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து