முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.யில் சோகம்: முடி மாற்று அறுவை சிகிச்சையில் இருவர் பலி: பல் டாக்டர் மீது புகார்

சனிக்கிழமை, 17 மே 2025      இந்தியா
Suicide 2023 04 29

புதுடெல்லி, உ.பி.யில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பல் மருத்துவரால் இருவர் உயிரிழந்ததாக புகார் எழுந்துள்ளது.

உ.பி.யின் கான்​பூரில் டாக்​டர் அனுஷ்கா திவாரி நடத்தி வந்த மருத்​துவ​மனைக்கு இளம் பொறி​யாளர்​கள் 2 பேர் சிகிச்​சைக்​காக வந்துள்ளனர். அவர்​களில் உ.பி.​யின் பரூக்​கா​பாத்தை சேர்ந்த பொறி​யாளர் மயங்க் கட்​டி​யார் என்​பவர் கடந்த நவம்​பர் 18-ல்  முடி மாற்று அறுவை சிகிச்சை பெற்​றார். ஆனால் 24 மணி நேரத்​துக்கு பிறகு முகம் வீங்​கி, மயங்​கின் உடல்​நிலை மோசமடைந்​தது. மறு​நாள் 19-ல் மயங்க் உயி​ரிழந்​தார். அதே​போல் கான்​பூர் பவர் ஹவுஸ் பகு​தியை சேர்ந்த பொறி​யாளர் வினீத் துபே​வும், முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த பிறகு மார்ச் 15-ல் உயி​ரிழந்​துள்​ளார்.

இரு​வரது குடும்ப உறுப்​பினர்​களும் டாக்​டர் அனுஷ்கா மீது புகார் அளித்​தனர். போலீ​ஸார் நடவடிக்கை எடுக்காததால் முதல்​வர் ஆதித்​ய​நாத்​தின் இணை​யதளத்​தில் புகார்​கள் பதிவேற்​றப்​பட்​டன. இதையடுத்து வினீத் மனைவி அளித்த புகாரின்​படி கல்​யாண்​பூர் பகுதி காவல் நிலை​யப் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரிக்க தொடங்கி உள்​ளனர்.  இதனால், மருத்​து​வ​மனையை மூடி​விட்டு அனை​வரும் தலைமறை​வாகி விட்​டனர்.

போலீ​ஸார் நடத்​திய விசா​ரணை​யில், முடி மாற்று அறுவை சிகிச்​சைக்​கான எந்த தகு​தி​யும், பயிற்​சி​யும் டாக்​டர் அனுஷ்கா​வுக்கு இல்லை என தெரிந்​துள்​ளது. இந்த சிகிச்​சைக்​காக டாக்​டர் அனுஷ்கா ஒவ்​வொரு​வரிடம் ரூ.40,000 முதல் ஒரு லட்​சம் வரை பெற்றுள்ளார்.

இதுகுறித்து  கல்​யான்​பூர் பகுதி காவல் துறை உதவி ஆணை​யர் அபிஷேக் பாண்டே கூறும்​போது, ‘‘டாக்​டர் அனுஷ்கா பல் மருத்​து​வம் மட்​டுமே பயின்​றவர் என விசா​ரணை​யில் தெரிந்​துள்​ளது. தலைமறை​வானவர்​களை தீவிரமாக தேடி வரு​கிறோம்’’ என்​றார். மேலும், உ.பி.​யின் மற்ற பகு​தி​களில் முடி மாற்​று அறு​வை சிகிச்​சை செய்​பவர்​களிட​மும்​ போலீ​ஸார்​ வி​சா​ரணை நடத்​தி வரு​கின்​றனர்​.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து