எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
சென்னை : சென்னையில் சட்டம் - ஒழுங்கு நிலை தொடர்பாக போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், குற்றச் செயல்களில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, மோசடி உட்பட அனைத்து வகையான குற்றச் செயல்களையும் முற்றிலும் தடுக்க காவல் ஆணையர் அருண் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். ரவுடிகள், தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்து வருகிறார். தொடர் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், ஆங்காங்கே சில குற்றச் செயல்கள் நடைபெற்று விடுகின்றன. இதையும் முற்றிலும் தடுக்கும் வகையில் போலீஸ் அதிகாரிகளுடன் காவல் ஆணையர் அருண், வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் ஆலோசனை நடத்தினார். இதில், கூடுதல் காவல் ஆணையர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள் மற்றும் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் திருவல்லிக்கேணி, அடையாறு, பரங்கிமலை, மயிலாப்பூர், புளியந்தோப்பு உட்பட சென்னையில் உள்ள 12 காவல் மாவட்ட அதிகாரிகள் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கைது விவரம், குண்டர் சட்டத்தில் ரவுடிகளை சிறையில் அடைத்த விவரம், நிலுவையில் உள்ள குற்ற வழக்கு விவரம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது, போலீஸ் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் காவல் ஆணையர் வழங்கினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 6 months ago |


