எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அரபிக்கடல் பகுதியில் வரும் 22 ம் தேதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது. மேலும், தமிழகத்தில் வரும் 20 வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது (புயல் சின்னம்) மத்திய கிழக்கு கர்நாடகத்தை ஒட்டிய அரபிக்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி (புயல் சின்னம்) உருவாகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்றழுத்தத் தாழ்வுப்பகுதியானது மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளது கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து மே 20 வரை பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே வடமாநிலங்களில் சில நாட்களுக்கு வெப்ப அலை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியில் 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் லேசான மழைப்பொழிவு இருக்க கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி கூறியுள்ளார்.
வடமேற்கு இந்தியாவில் வடக்கு-தெற்கு உயர் அழுத்தம் விளைவாக பஞ்சாப், அரியானா, டெல்லி மற்றும் வடக்கு ராஜஸ்தானில் கடந்த சில நாட்களாக 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வலிமையான மேற்பரப்பு காற்று வீசியது. இதன் விளைவாக, மேற்குறிப்பிட்ட மாநிலங்களில் சில பகுதிகளில் புழுதி பரவியது. இதனால், டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திலும் தெளிவற்ற வானிலை காணப்பட்டது. டெல்லியில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. எனினும், 20-ந்தேதிக்கு பின்னர், 21 அல்லது 22 ஆகிய தேதிகளில் டெல்லியில் லேசான மழைப்பொழிவு இருக்க கூடும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 6 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 6 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 7 months ago |


