முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரோகித் சர்மா நெகிழ்ச்சி

சனிக்கிழமை, 17 மே 2025      விளையாட்டு
Rohit-Sharma 2023-05-17

Source: provided

மும்பை வான்கடே மைதானத்தில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்படும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், சரத் பவார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பெயரில் ஸ்டாண்டு திறக்கப்பட்டது. அந்த ஸ்டாண்டை ரோகித் சர்மா அப்பா- அம்மா, மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சேர்ந்து திறந்து வைத்தனர். மேலும் மும்பை வான்கடே மைதானத்தில் ரோகித் சர்மா, அஜித் வடேகர், சரத் பவார் பெயரில் 3 புதிய ஸ்டாண்டுகள் திறக்கப்பட்டது. 

இந்நிலையில் வான்கடே மைதானம் குறித்த நினைவுகளை ரோகித் சர்மா பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:- ரெயிலில் இவ்வழியாக செல்லும் போதெல்லாம் வான்கடே மைதானத்தை ஒருமுறையாவது பார்த்துவிட வேண்டும் என நினைத்துக் கொண்டே பயணித்த நாட்களை நினைவுகூர்கிறேன். இந்த ஸ்டான்ட் மிகவும் ஸ்பெஷல். நான் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இது எப்போதும் நிலைத்து நிற்கப்போகிறது. இவ்வாறு ரோகித் கூறினார்.

______________________________________________________________________________________________

நீரஜ் சோப்ரா புதிய சாதனை 

டயமண்ட் லீக் தொடரின் 16-வது சீசன் நடந்து வருகிறது. இதன் 3-வது சுற்று கத்தாரின் தோஹாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் 90 மீட்டர் தூரம் எறிந்த 3-வது ஆசியவீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா பெற்றார். இதற்கு முன்பு இந்த இலக்கை எட்டிய மற்ற இரண்டு ஆசிய வீரர்கள் ஒலிம்பிக் சாம்பியனான பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் (92.97 மீ) மற்றும் சீன தைபேயின் சாவோ-சுன் செங் (91.36 மீ) என்பது குறிப்பிடத்தக்கது.

போட்டியின் முடிவில் நீரஜ் சோப்ரா 2-வது இடம் பிடித்தார். ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 91.06 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்தார். கிரனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 85.64 மீட்டர் தூரம் எறிந்து 3-வது இடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் ஜெனோ கிஷோர் 78.60 மீட்டர் தூரம் எறிந்து 8-வது இடம் பிடித்தார்.

______________________________________________________________________________________________

மே.இ.தீவுகள் அணிக்கு புதிய கேப்டன் 

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான வெஸ்ட் இண்டீஸ் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் ஜோமல் வாரிக்கன் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியிலிருந்து கிரெய்க் பிராத்வைட் விலகினார். இதனையடுத்து புதிய கேப்டனாக ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

அடுத்த (2025-27) உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சிக்கு முன்னர் அணியை வலுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் கேப்டனாக சேஸின் முதல் சோதனை ஜூன் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரிலிருந்து ஆரம்பமாக உள்ளது.

______________________________________________________________________________________________

அடுத்த 10 நாட்கள்.... கவாஸ்கர்

இந்தியா-பாகிஸ்தான் மோதலினால் பாதியில் நிறுத்தப்பட்ட ஐ.பி.எல். 2025 சீசன் மீண்டும் நேற்று முதல் (மே.17) தொடங்கியது. போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் முக்கியமான கடத்தினை அடைந்துள்ளது. போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில், அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு நுழையும் முக்கியமான கடத்தினை அடைந்துள்ளது. இந்நிலையில்  முன்னாள் இந்திய வீரருமான சுனில் கவாஸ்கர் அடுத்து வரும் 8-10 நாள்கள் முக்கியமானது எனப் பேசியது கவனம் ஈர்த்துள்ளது. 

சுனில் கவாஸ்கர் பேசியதாவது: ஒரு பேட்ஸ்மேன் ஸ்டிரைக்கில் இல்லாமல் நிற்பது போல, இந்த இடைவேளையும் சில அணிகளின் ரன்னிங்கை பாதிக்கக் கூடும். அதேசமயத்தில் தில்லி, மும்பை, பஞ்சாப் போன்ற அணிகளுக்கு இது மீளாய்வுக்கும் உதவலாம். பிளே ஆஃப் சுற்றுகள் நெருங்கும் இந்த 8–10 நாள்கள் மிகவும் முக்கியமானவை. தோனி, ரோஹித், விராட் அளவுக்கு இளம் கேப்டன்கள் இன்னும் வளர வேண்டியிருக்கிறது. ஆனால் ஷுப்மன் கில், ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் வித்தியாசமான அணுகுமுறையுடன் வருகிறார்கள் என்றார்.

______________________________________________________________________________________________

31-ம் தேதி புரோ கபடி லீக் ஏலம்

12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் வருகிற 31 மற்றும் ஜூன் 1-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி அணிகள் அனைத்தும் தற்போது தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை வெளியிட்டு வருகின்றன. அதன்படி தமிழ் தலைவாஸ் அணி சாகர், ஹிமான்ஷு மற்றும் மொயின் ஷபாகி ஆகியோரை தக்கவைத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 10 months 3 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 11 months 3 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 11 months 3 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 1 month ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 1 month ago
View all comments

வாசகர் கருத்து